அமான் அமைப்பின் நோக்கமும் திட்டமும்

Vision and Mission

அன்பு நண்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்

2008 லிருந்து இன்று வரை அமான் அமைப்பின் நோக்கமும் திட்டமும், அல்லாஹ்வின் அருளால், அமைதியாக நடந்து வருகிறது. 2014 -ல் அதன் நோக்கத்திலும் திட்டத்திலும் பெரிய முன்னேற்றம் ஏற்படவேண்டும்….

1. முடங்கிக் கிடக்கும் மத்ரஸா சிராஜுல் முனீர் செயல்படவும்;
2. பழைய பள்ளிவாசல் செப்பனிடவும்;
3. அடியற்கை அரசு உயர்நிலைப் பள்ளியின் கல்வித் தரம் உயரவும்; அதனால் வெளி ஊர்களில் சென்று படித்து வரும் நமதூர் பிள்ளைகள் நமதூர் பள்ளியிலேயே படிக்க ஊக்குவிக்கவும்; ஆங்கில வழிக் கல்விக்கு வகை செய்யவும்; மாணாக்கர்களின் எண்ணிக்கை கூடும் சமயத்தில் பெண்கள் உயர் நிலைப்பள்ளி உருவாக உழைத்திடவும்;

4. நன்கு படிக்கும் மாணாக்கர்களை 8 ம் வகுப்பு முதல் கண்டுணர்ந்து அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கவும்; திறன்மிக்க மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்களை கெளரவிக்கவும்;

5.மருத்துவ கருத்தரங்கங்கள் பல நடத்தி நம் மக்களிடையே நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்;

இன்னும் பல நல்ல காரியங்களை, இன்ஷா அல்லாஹ், நடைமுறைப் படுத்திட வல்ல இறைவன் அமான் சகோதரர்களுக்கு வல்லமை தருவானாக என்று துஆ செய்வோமாக.

(Visited 13 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)