அமான் செயற்குழு கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 13, 2014 0 Comments

அமான் செயற்குழு கூட்டம் 7-2-14

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமான் செயற்குழு கூட்டம் அண்ணன் பனி அப்தால் அலுவலகத்தில் 7-2-2014 அன்று நடைபெற்றது.

தலைமை:பனி அப்தால்

கிராஅத் மற்றும் வரவேற்புரை:சிராஜ் ஹஜரத்

தொடக்க உரையாக முன்னால் செயலாளர் அமீர்தீன் அவர்கள் அமானின் நற்பணிகள் குறித்து ஆழ்ந்த மகிழ்ச்சியும் மேலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாகவும் தெரிவித்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து அமானின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் செயற்குழு உறுப்பினர்களின் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் மைய கருத்தாக கல்வி விழிப்புணர்வு மற்றும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, கல்விக்கு அரசாங்கம் தரும் சலுகைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது,கல்விக்குழு மற்றும் மருத்துவக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிப்பது குறித்ததாக இருந்தது.

சிறப்பு விருந்தினராக ஜனாப் A.P.A.பக்கீர் அஹமது அவர்கள்  கலந்து கொண்டனர். அவர் பேசும்போது நமது ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருப்பது போல் ஊரிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.மேலும் நமது ஊரில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி கொண்டுவர பாடுபட வேண்டிய அவசியத்தை பற்றி கூறினார்.

அமான் 7-ம் ஆண்டு பொதுக்குழு வரும் மார்ச் மாதம் 7-3-2014  நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கானவிழாகமிட்டிஅமைக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக ஹாஜாமுபாரக், அமீர்தீன், ஹாஜானி, E.P.M.சிராஜுதீன், U.சிராஜ், சாதிக் அபுதாபி,O.A.S.கபீர், முஹம்மது ஹாரிஸ் ,ரஹிமுதீன் ,நூருதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

விழாவின் நன்றியுரை: அனீஸ்தீன் அவர்கள் நிகழ்த்தினார்.

துஆ வுடன் கூட்டம் இனிதே கலைந்தது.

அல்ஹம்ந்துலில்லாஹ்

 

 

 

 

(Visited 19 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)