23/09/2016 –அன்று நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on September 23, 2016 0 Comments

بسم الله الرحمن الرحيم

அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 23/09/2016 மாலை அசருக்கு பின் 5:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள்

புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சந்தா மற்றும் நன்கொடை பாக்கிகளின் வசூல் முடுக்கி விடுவதென்றும்
அமான் ஆன்லைன் போர்டல் மேனேஜ்மென்ட் மட்டும் பயன்படுத்துவதென்றும்
இந்த வருடம் நவம்பர் இறுதியில் வின்டர் பிகினிக் நடத்துவதென்றும்
ஆலோசித்து எடுக்கப்பட்டன.
அமான் நிர்வாகத்தின் விண்ணப்பம்:
அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அமானுடைய பணிகளை அங்கீகரித்து, நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சந்தா மற்றும் நன்கொடை பாக்கிகளை அளித்து உதவிடுங்கள் ! இன்ஷா அல்லாஹ்!!

நமதூர் மக்களின் கஷ்டத்தை போக்கிடும் நமது கொள்கைகளுக்கு உறுதுணையாய் இருங்கள். நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

நீங்கள் கொடுத்து உதவிடும் சந்தா, நன்கொடை, ஜக்காத் மற்றும் சதக்கா பொருட்டு, உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் அல்லாஹ் கருணையை இறக்கி, மேலும் பரகத் செய்வானாக! ஆமின்!!

– அமான் தலைவர் & நிர்வாகிகள்

புகைப்படங்கள் :

(Visited 53 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)