அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு…! தலைவரின் மடல் 03/05/2015

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு… தலைவரின் மடல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…).

மீண்டும் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக, நம்முடைய அமான் இணையதளம் வழியாக மீண்டும் உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமோடு இருக்க துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 01/05/2015 அன்று  துபாய் மண்டல கூட்டம் ஜனாப். முஸாவுதீன் அவர்களின் கிராத்துடன் துவங்கி, மிகச் சிறப்பாக நடைபெற்றது. அச்சமயம் நமதூரிலிருந்து நமது தாயக பிரதிநிதி ஜனாப்.  JMA தாவூத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஜனாப். JMA தாவூ த் அவர்கள் ஆற்றிய சிற்றுரையில், நமது அமானுடைய சேவைகள் ஆடம்பரம் மற்றும் விளம்பரமற்ற முறையில் அமைதியாகவும், சிறப்பாகவும் மக்களை சென்று அடைவதாக தெரிவித்தார்கள். மேலும் நம்முடைய சேவைகள், இப்பொழுது நாம் செய்யும் கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் திட்டங்களுடன் நின்று விடாமல், தொலைதூர நோக்கில் பெண்கள் மதிராசா, பெண்கள் உயர்நிலை பள்ளி போன்ற பெரிய குறிக்கோள்களுடன் இன்னும் சிறக்க, நமக்கு விண்ணப்பித்தது மட்டும் அல்லாமல், வல்ல அல்லாஹ்விடம் துஆவும் செய்தார்கள்.

ஆமீன், ஆமீன்… யாராப்பல் ஆலமீன்.

மேலும் கூட்டத்தில் ஜனாப். பனி அப்தால், ஜனாப். AR. ஷவ்க்த் அலி உரை நடத்தினர் மற்றும் ஜனாப். M.T அமீறுதீன், ஜனாப். S. அல் அமீன், ஜனாப். APA பஷீர், ஜனாப். OAS கபீர் அவர்களுடைய கருத்துக்களையும்,  சில கோரிக்கையும் வைத்தனர். நாம் அவர்களுடைய கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நம்முடைய தாயக பணிகளை மேலும் வலுவாக்க முனைவோம். அனைவருக்கும் உதவி செய்ய நமக்கு நிறைய பொருளாதாரம் தேவைப்படுகிறது, மற்றபடி எந்த தடையுமில்லை, அதற்குரிய நேரம் வரும்பொழுது முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தோம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் எண்ணங்களை பூர்த்தி செய்வானக.

மேலும் இந்த கூட்டத்தில் நாம் திட்டத்தின் PENSION நிலுவையில் உள்ள மனுக்களை பற்றி கூறிய போது, உறுப்பினர்கள் நம்முடைய கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு மனுக்களையும் SPONSOR எடுத்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

கூட்டத்தில் துபாய் மண்டல செயலாளர்களாக ஜனாப்.  மு. மு. சர்புதீன்,  சகோ. OAS கபீர், சகோ. M. A. ஹாஜா மொய்னுத்தீன்,  சகோ. அ. ஷேக் தாவூத், சகோ. T. மரூஃப் மற்றும்  ஜனாப். முஸாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற  உறுதுணையாக இருந்த வல்ல இறைவனுக்கும்,  செயலாளர்கள்,  இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகஸ்தர்கள்,  கலந்து கொண்டு சிறப்பித்த துபாய் மண்டல  உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

மற்றும் பல விஷயங்களை விவாதித்து கூட்டம் சகோ. ஜபீன் அவர்களின் நன்றியுரையு கூற, துவாவுடன் இனிதே நிறைவேறியது.

நாம் கேட்டு கொண்டதற்கு இணங்கி, இக்கூட்டத்திற்கு துபாய் மற்றும்  மற்ற மண்டல உறுப்பினர்கள், முன்னால் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர், அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகள் நம்முடைய அழைப்பை ஏற்று அமானுடைய ஒருங்கிணைப்பு கூட்டத்திற்க்கு வந்து மற்றும் மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

எப்பொழுதும் போல இறுதியாக ஒன்றை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த கூட்டத்தில் எப்படி வந்திருந்த உறுப்பினர்கள், நம்முடைய கோரிக்கையை ஏற்று உதவி செய்ய முன்வந்தார்களோ, அதுபோல் அனைவரும் நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.
அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

மேலும் நம்மை நோக்கி நோன்பு வெகு வேகமாக வந்துகொண்டிருக்கிறது, நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் ஆயத்தப்படுத்துங்கள். உங்களுடைய சந்தா மற்றும் ஜக்காத் தொகையை தயவு செய்து நமக்கு கொடுத்து நமதூர் மக்களின் கஷ்டத்தை போக்கிடும் நமது கொள்கைகளுக்கு உறுதுணையாய் இருங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

புதிய அமான் செய்திகளுடன் அடுத்த வாரம் எழுதும் வாய்ப்பை தந்தருள வல்ல இறைவனை துஆ செய்தவனாக இந்த மட லை நிறைவு செய்கிறேன்.
வஸ்ஸலாம்

சமீஹுன் மஜீத். அ
தலைவர், அமான்
+971 50 7653805
amanaym@gmail.com / alsameehun@yahoo.com

(Visited 63 times, 1 visits today)

Tags: ,

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Haja Mubarak says:

    மாஷா அல்லாஹ்!!! துபாய் மண்டல கூட்டம் எப்போதுமே கொஞ்சம் அமைதியாகவே நடைபெறும். இந்த முறை மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.அல்ஹம்துலில்லாஹ் மேலும் நமது அமானின் நோக்கங்களான வட்டி ஒழிப்பு, பெண்கள் மதரசா, மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை உருவாக்க அல்லாஹ் நமக்கு அழகிய வழியை திருமறையில் கூறியுள்ளான். ” நீங்கள் பிரிந்து விடாதீர்கள்” “ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாக பற்றிபிடித்து கொள்ளுங்கள்”. அல்லாஹ்வின் வழியை பின்பற்றினால் இவையெல்லாம் சாத்தியமே!

  2. Singai Anban says:

    நமதூர் மக்களை ஓரிடத்தில் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, ஒற்றுமை நீடிக்கட்டும். வல்ல இறைவன் அருள் பொழியட்டும். ஆமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)