அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – தொடங்கியது

bismillah

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் ( இரண்டாம் கட்ட) – தொடங்கியது பட்டுவாடா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 22 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வருடம் 38 மனுதாரர்கள் மாதாந்திர உதவி கேட்டு அமானுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர்.

அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு ஸ்பான்சர்கள் அவர்களுடைய ஆதரவையும், மேலும் பலர் அவர்களுடைய ஹதியாவை  செலுத்தியும் விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இதனால் நம்முடைய நிதி திரட்டும் முதல் கட்ட நடவடிக்கைகள் நிறைவேறியுள்ள நிலையில் கடந்த ரம்தான் பிறை மூன்றன்று  (ஞாயிற்றுக்கிழமை 21/06/2015) அமான் ஒரு வருட பென்சன் திட்டம் ( இரண்டாம் கட்ட) – பட்டுவாடா தொடங்கியது.

IMG-20150621-WA002 IMG-20150621-WA003 IMG-20150621-WA004 IMG-20150621-WA005

இன்ஷா அல்லாஹ் இந்த ரமலான் முதல் தொடக்கம் அடுத்த ரமலான் வரை இந்த தொகையை அளிக்க அமான் முடிவு செய்துள்ளது.

அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்யவும், வல்ல அல்லாஹ் நம்முடைய அமான் பணிகளுக்கு உரு துணையாய் இருக்கும் அனைத்து மக்களையும், அவர்கள் செய்யும் அணைத்து நல்லமல்களையும்  பொருந்தி கொள்ளவும் துஆ செய்கின்றோம்! ஆமீன்.

அமான்.
23/JUN/2015

(Visited 102 times, 1 visits today)

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. SingaiAnban says:

    2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”

  2. Nizam says:

    4:85 எவரேனும் (யாதொரு) நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கும். (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கும்……

    மாஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)