அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – 03/07/2015

bismillah

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 03-7-2015 ரமலான் பிறை 16, ஹிஜ்ரி 1436 வெள்ளிக்கிழமை
துபையில் நடைபெற்ற “அமான்” அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் அமீரகம் வாழ் அடியற்கை சகோதரர்கள் ஒருங்கினைந்த “அமான் இஃப்தார் நிகழ்ச்சி” சிறப்பாக நடந்திட உதவி செய்த

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

 

அமான் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும்,குடும்பத்துடன் கலந்துகொண்ட சகோதரர்களுக்கும்,

தொலைதூரத்திலிருந்து நமதூர் சகோதரர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு  அமான் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த அபுதாபி , ஷார்ஜாஹ் , அஜ்மான், துபை மற்றும் அனைத்து மண்டல சகோதரர்களுக்கும் அமான் நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் சிறப்புரை ஆற்றிய தொண்டி ஜனாப். மொய்தீன் மற்றும் நாகூர் ஜனாப்.சையதுஅலி அவர்களுக்கும், லேண்ட்மார்க் ஹோட்டல் குரூப் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்தி தந்த விழாக்குழுவினர் மற்றும் அமான் மீடியா குழுவினர்க்கும் அமான் நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
நன்றி ! நன்றி ! நன்றி ! ஜஸாகல்லாஹூ ஹைரன்.

இதனை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்களுக்கும் நமதூர் சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும்  முஸ்லிம்கள் அனைவருக்கும் கருணை மிக்க அல்லாஹ் ஈமானோடு நீடித்த ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் நிறைந்த செல்வத்தையும் வாழ்வில் பரகத்தையும் ரஹ்மத்தையும் தந்தருள்வானாக என்றும் இந்த புனித ரமலானில் செய்யும் நல் அமல்களையும் கபூல் செய்வானாக என்றுநிறைந்த இதயத்தோடு துஆ செய்கிறோம்.

ஆமீன். ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆமீன்

இப்படிக்கு

அமான் மற்றும்  பைத்துல்மால் நிர்வாகம்

 

 

(Visited 169 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. nijam says:

    அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்ஹம்துலில்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)