மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

அடியக்கமங்கலம் – 14/08/2016.

அமான் டியூஷன் சென்டர் கடந்த 15/08/2015 துவங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவேறியதையொற்றி முதல் வருட நிறைவு விழாவும், கடந்த ரமலான் மாதத்தில் நடந்த இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும், கடந்த கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முதல் மூன்று மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கடந்த 14/08/2016 அன்று நமதூர் அடியக்கமங்கலம் பெரிய பள்ளி வாயிலில், அமான் அலுவலகம் முன்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை நமது ஒருங்கிணைப்பாளர்கள் ஜனாப். A. பனி அபிதால் மற்றும் ENA நூருல் அமீன் அவர்களும் நமது தாயக பிரதிநிதிகளும் முன்நிலை ஏற்றார்கள். நமதூர் ஜமாஅத் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் தலைமை ஏற்ற இவ்விழாவில், நமதூர் பெரியவர்கள், சிறார்கள், அமான் பஹ்ரைன் மற்றும் அமான் கத்தாரை  சேர்ந்த நமதூர் நண்பர்கள் பங்கேற்றார்கள்.

மேலும் அமீரகம் மற்றும் லண்டன் போன்ற வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்கு வந்த நமதூர் நண்பர்களும் பங்கேற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

நமது அல் அமீன் தொகுத்து நடத்திய இவ்விழா , அமான் தலைவர் நன்றி கூற விழா இனிதே நிறைவேறியது.

ஒரு வருடத்திற்கு பிறகு நமது அமான் உறுப்பினர்கள், கொடையாளர்கள், நமதூர் வெளிநாடு மற்றும் உள்நாட்டு  மக்களையும் சந்திக்க ஒரு வாய்ப்பு அளித்த வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்.

புகைப்படம்:

IMG-20160821-WA0035 IMG-20160821-WA0010 IMG-20160821-WA0028 IMG-20160821-WA0027

IMG-20160821-WA0036 IMG-20160821-WA0038 IMG-20160821-WA0029 IMG-20160821-WA0025 IMG-20160821-WA0023 IMG-20160821-WA0022 IMG-20160821-WA0021 IMG-20160821-WA0019 IMG-20160821-WA0017 IMG-20160821-WA0014 20160814_180019

20160814_174023 20160814_174029 20160814_174358 20160814_174409 20160814_174524 20160814_174735 20160814_174738 20160814_175721 20160814_175856 20160814_175906 20160814_180014 20160814_180019 20160814_180020 20160814_180346 20160814_180930 20160814_181752

(Visited 54 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)