அமான் – செயற்குழு கூட்டம்

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் – செயற்குழு கூட்டம்

கூட்டத்தின் நிமிடங்கள் – MoM

MoM

 

நேற்று செவ்வாய்கிழமை 16/06/2015 இரவு 9:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஆன்லைனில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தை நமது அமான் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். பணி அப்தால் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள்.

முதலில் நமதூரிலிருந்து கலந்து கொண்ட APA பஷீர் அவர்கள் நமது பென்ஷன் திட்ட ஏற்பாடு, சகோதரர் காதர் அலி அவர்களுடைய உடல் நிலை, உதவிக்கான ஏற்பாடுகளை பற்றிய செய்திகளை சொன்னார்கள்.

மேலும் அது சமயம், செயற்குழு கூட்டத்திற்கான அஜெண்டா ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. இஃப்தார் நிகழ்ச்சி
வருகின்ற ஜூலை 3ஆம் தேதி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

2. சகோதரர் காதர் அலி – உதவி!
அமான் சார்பாக ஒதுக்கப்பட்ட ரூபாய் 15,000 மற்றும் வசூல் தொகை, அமான் தாயக அலுவலகம் வழியாக, நமது  APA பஷீர் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

3. புதிய கல்வி ஆண்டின் மனுக்கள் – திட்டம்
அர்ரியர்ஸ் இல்லாத / குறைந்த அல்லது மதிப்பெண்கள் அதிகமான மாணவர்களுக்கு உதவி  செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது.

4. இதர நிதி சேமிக்கும் திட்டங்கள்
மருத்துவ எமெர்ஜென்சி நிதி உருவாக்குவதென்று முடிவு செய்யப்பட்டது

5. ரமலான் ஜகாத் வசூல் – தாயகம்
தாயக பிரதிநிதிகள் ஆலோசனைக்கு விடப்பட்டது.

6. சந்தா வசூல் முடுக்கம் – செயலாளர்கள் ஒருங்கிணைப்பு
பொது செயலாளர் பொறுப்பில் விடப்பட்டது.

7. நமதூர் ஜமாஅத் தலைவரின் ‘பாண்ட்’ மனு / மடல்
அடுத்தகட்ட ஆலோசனைக்கு வைக்கப்பட்டது.

மேலும் ஜனாப் ஹாஜா முபாரக் அவர்கள் வசம் வந்த ஒரு கல்வி மனுவிற்கு ரூபாய் 30000/= வழங்குவதென்றும் மற்றொரு வட்டியில்லா கடனுக்கு ரூபாய் 20000/=* வழங்கி மாதம் 1000/= வீதம் திரும்ப பெருவதேன்றும் முடிவெடுக்க பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!

செயற்குழு கூட்டத்திற்கு ஆன்லைனில் வருகை தந்து நம்முடைய அடுத்த கட்டத்துக்கான முடிவுகளை எடுக்க உதவி புரிந்த:

ஜனாப் பனி அப்தால், ஜனாப் ஹாஜா ஷௌகத் அலி, ஜனாப் முஹமது ஜபீன், ஜனாப் ஹாஜா முபாரக், ஜனாப் ஷேக் தாவூத், ஜனாப் அமீருதீன் . S, ஜனாப் பஷீர் APA, ஜனாப் லியாகத் அலி  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

இப்படிக்கு,
தலைவர், அமான்

17/06/2015

 

(Visited 57 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)