அபுதாபி மண்டல செயற் குழு கூட்டம் – 26-02-2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…).

நேற்று 26/02/2016 அன்று அபுதாபி மண்டல செயற் குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டம் ஜனாப். ஹாஜா முபாரக் கிராத் ஓத,  துணை பொது செயலாளர் ஜெஹபர் சாதிக் வரவேற்புரை நல்க இனிதே துவங்கியது. கூட்டத்தில் அபுதாபி மண்டல ஜனாப். ஹாஜா முபாரக்,  ஜனாப். சிராஜ் ஹஜ்ரத்,  ஜனாப். ஷேக் தாவூத், ஜனாப். அல் அமீன் உரை நடத்தினர்  மற்றும் சில கோரிக்கையும், குறைகளையும் முன் வைத்தனர்.

DSC_0269 DSC_0270 IMG-20160226-WA044 IMG-20160226-WA045 IMG-20160226-WA046 IMG-20160226-WA047

இதனை  தொடர்ந்து தலைவர் உரையில்  கோரிக்கைகளுக்கான பதிலும், குறைகள் நிவர்த்தி செய்து நம்மில் உள்ள ஒற்றுமையில் எவ்வித குறையும் இல்லாமல் வரும் காலங்களில் பார்த்துகொள்வதாக உறுதி அளித்தார். மேலும் அமான் டியூஷன் சென்டர் மக்களிடையே  வரபேற்பை பெற்றுள்ளதாகவும், தினமும் இரண்டு வேலை திறக்கபடுவதாகவும் தெரிவித்தார்.

நம்முடைய அமான் எந்த நோக்கத்துக்காக துவங்க பட்டதாகவோ அந்த நோக்கத்தில் அந்த பாதையில் வெற்றி நடை போடுவதாகவும் தெரிவித்தார். நமதூர் மக்கள் பல்வேறு இயக்கங்களில் இருந்தாலும், உதவி என்று வரும்போது அமானை தாய்க் கழகமாக காண்கின்றனர் என்றார். அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும்!!

இந்த வருட பொதுக்குழு கூட்டம் 11/03/2016 நடத்துவது என்றும், இந்த தேதிகளில் ஏதும் ஹால் கிடைக்கவில்லையென்றால் 18/03/2016 இல் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நமதூர் ஜமாஅத்-இல் இருந்து வந்த சமுதாயக்கூடம் பற்றிய கடிதம் வாசிக்கப்பட்டது, மேலும் அது பற்றிய முடிவு தனி  நபர் விருப்பங்களுக்கு விடப்பட்டது. மற்றும் பல விஷயங்களை விவாதித்து துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.

நாம் கேட்டு கொண்டதற்கு இணங்கி, இக்கூட்டத்திற்கு ஷார்ஜா மற்றும்  துபாய் மண்டல உறுப்பினர்கள், முன்னால் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

நிச்சயமாக நம்மூர் மக்களுடன், நம்மூர் செய்திகளுடன் செய்யும் பயணம் என்றுமே மிகவும் அலாதியானதொரு சுகம், மேலும் நாம் அன்று மேற்கொண்ட 250 கி. மி. பயணம் மிகவும் சுவையானதாகவும் மிக்க பயனுள்ளதாகவும் இருந்தது.  அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற  உறுதுணையாக இருந்த வல்ல இறைவனுக்கும், துணை பொது செயலாளர் ஜெஹபர் சாதிக்,  ஜனாப். ஹாஜா முபாரக் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அபுதாபி மண்டல  உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நம்முடைய அழைப்பை ஏற்று அமானுடைய ஒருங்கிணைப்பு கூட்டத்திற்க்கு வந்து, மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

எப்பொழுதும் போல இறுதியாக ஒன்றை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகின்றோம் , நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

(Visited 149 times, 1 visits today)

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Singai Anban says:

    அல்ஹம்துலில்லாஹ் நமதூர்மக்களை ஒன்றாக பார்ப்பது மனதுக்கு ரம்யமாக உள்ளது. சிங்கபூர் மலேசியாவிற்கு ஒரு அமான் தேவை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)