ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 06-07-2016

AMAN EID MUBARAK GREETINGமாதங்களில் புனிதமான மாண்புமிகு ரமலானின் மாசற்ற நோன்பினை பசித்திருந்து நிறைவேற்றி இல்லாதோருக்கு கொடுத்துவந்து இறைவனின் நாட்டம் கொண்டு இனிதே கொண்டாடும் இந்தஈகை திருநாளில் இதயம் கனிந்த வாழ்த்துக்களை இனிதே தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைவன் கொடுத்த மறை ஒளி,வழிக்காட்ட ..

சொர்க்கத்தின் கதவுகள்திறக்கப்பட்டன!

நன்மையின் பக்கம் அழைக்கப்பட்டனர்.

ரமலான் மாதம்,உண்ணவில்லை,உறங்கவில்லை,ஆனாலும் சுனக்கமில்லை,

நன்மையோடு உண்மையும் ,நடமாட்டம்.

இருப்பதில் கொடுத்து,இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம்.

சூரியன் உதிப்பது முதல்,மறையும் வரை உண்ணாமல், ஆனாலும் பசியில்லை,

ஐந்துவேளை தொழுகையுடன்,எந்த வேலையும் பளுவில்லை,

கடந்தோம் ரமலான் நோன்பினை,

அறிந்தோம் நேர் வழியினை!

ஷவ்வால் பிறைக்கண்டு,ஈகை பெருநாள் கொண்டாடும்,வேலையில்…

உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

நம்மோடு இணைந்து வாழும் சகோதர்களுக்கும்,ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

இருப்பதை கொண்டு இனிதே வாழ்வோம் .இல்லாமை போக்க இணைந்தே வாழ்வோம்!

ஒற்றுமை மூலம் பலம்பெற்று,ஓர் அணியாய் வாழ்வோம்!

நபி வழி, நல் வழி என்று,அவ் வழி நம் வழி

என்று நலமுடன் வாழ்வோம்!ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!

-அமான் நிர்வாகம், தாயக பிரதிநிதிகள் & உறுப்பினர்கள்

(Visited 23 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)