இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை பிக்னிக் 2016!

துபாய், அமீரகம்
09-12-2016.

இப்படியும் ஒருநாள் – அமீரக வாழ் அடியற்கை சொந்தங்களை ஒன்றுக்கூட்டிய அடியற்கை முஸ்லிம் அசோசியேசன் (அமான்) பிக்னிக் 2016

நவீன விஞ்ஞான உலகத்தில் ஒன்றுக்கூடல், கூடி பேசுதல் என்ற உன்னதமான பாசப்பிணைப்பு கலந்துரையாடல் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு முகநூலும், வாட்ஸ்அப்பும் நம்மை ஆக்ரமித்துவிட்டன. ஒரே வீட்டில் உள்ளவர்கள்கூட பேசிக்கொள்ள முடியாத நிலைக்கு இன்றைய நவீன உலகம் அழைத்து செல்கிறது.

ஆனால் இன்று துபாய் முஷ்ரிப் பூங்காவில் நடைப்பெற்ற அமான் பிக்னிக் தற்போதைய நடைமுறையை மாற்றி அமைத்தது. அடியக்கமங்கலம் சொந்தங்கள் குடும்பத்தோடு இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். உறவுகள், நண்பர்கள், ஒருவரையொருவர் நீண்டநேர கலந்துரையாடல், சிறுவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள். சாக்கு ஓட்டம், எலுமிச்சைப்பழம் ஸ்பூன் ஓட்டம், ஓட்டப்பந்தயம், போன்றவை என் சிறுவர் காலத்திற்கு அழைத்து சென்றது.

வீர விளையாட்டான கபாடிப்போட்டி, கயிறு இருத்தல் போன்ற விளையாட்டுக்கள் அதைத்தொடர்ந்து பரிசளிப்புகள் என் உயர்நிலைப்பள்ளி கல்விக்காலத்தை நினைவுக்கு கொண்டு வந்தன.

இப்படியாக இன்றைய ஒருநாள் சந்தோசத்தில் அடியக்கமங்கல நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் இருந்தனர். அனைவரது அலைப்பேசியும் ஓய்வெடுத்தது.

இந்நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்து தந்த அனைத்து அடியக்கமங்கள நண்பர்கள், குடும்பங்கள் அனைவருக்கும் அமான் நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி. ஜசாக்கல்லாஹ் ஹைரேன்!.

 

(Visited 102 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)