அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன் (அமான்) கத்தார் கிளை தொடங்கப்பட்டது

Filed in அமான் நிகழ்வுகள் by on October 29, 2013 1 Comment

aman banner 2008அல்லாஹ்வின் உதவியால் இன்று (17.10.2013) அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்(அமான்) கத்தார் கிளை தொடங்கப்பட்டது. நமது ஊர் சகோதரர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தந்தார்கள். எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. மேலும் இக் கிளையின் மூலம் நல்ல பல காரியங்கள் செய்ய அல்லாவிடம் துவா செய்யுமாறு தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமான் கத்தார் கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் 2008 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் அமீரகம் துபாயில் ஒருங்கிணைந்து , கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ள நம் சமுதாயத்தின் நிலமைகளை ஆலோசனை செய்து,

தாங்களும் மற்றும் நமதுர் சகோதரர்களும் அல்லாஹுவின் அருளால் வாரி வழங்கும்

சந்தா,நன்கொடை, மற்றும் ஜக்காத், சதகா, நிதிகளை பெற்று, நமதூர் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவியும், நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும், முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வாழ்வாதார உதவியும், தொழில் முனைவோருக்கு சிறுதொழில் செய்ய முதலீட்டு உதவிகளையும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்து வருகிறோம்.

அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்(அமான்)அல்லாஹ்வின் உதவியால் மிக விரைவில் மற்ற அரபு நாடுகளிலும் அமான் கிளை துவங்க நமதூர் சகோதரர்கள் பாடுபட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் நமதூர் சகோதரர்கள் பயன் அடைந்து வெகு விரைவில் ஏழைகளே இல்லாத ஊர் அடியக்கமங்கலம் என்ற பெயர் பெற வேண்டும் என்பதே நமது அவா.

(Visited 35 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Bani Abthal says:

    Dear friends
    Assalaamu Alaikum wa Rahmathullah
    May Allah bless all our friends in joining hands for helping others. And I thank our friends in Qatar for their decision to operate through one forum, AMAN. Unity plays a major role in success of any activity. AMAN should establish continuous contact with our friends in Saudi Arabia and Bahrain as well, who shown a great interest in AMAN. United, we can bring a change in our community, Insha Allah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)