அமான் செயற்குழு கூட்டம் 25-04-2014

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் பேரருளால் இன்று 25-04-2014 அமான் செயற்குழு கூட்டம் ஷார்ஜாவில் அமான் கெளரவத்தலைவர் அமீன் அண்ணன் அவர்கள் அலுவலகத்தில் அஸருக்கு பிறகு நடைப்பெற்றது. கூட்டத்திற்கு ஜனாப் அமீன் அண்ணன், ஜனாப் பனி அப்தால், ஜனாப் அனீஸ்தீன்,ஜனாப் ஹாஜா சவுக்கத்தலி, ஜனாப் ஹாஜி முஹம்மது,ஜனாப் பஜல் ரஹ்மான்,ஜனாப் ஹாஜா நிஜாமுதீன் இவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

  1. மருத்துவ உதவி கேட்டு வந்த இரண்டு விண்ணப்பத்திற்கு தலா 10,000 ரூபாய் வீதம் 20,000 வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
  2. சிறுதொழில் தொடங்க கடனுதவி கேட்டு வந்த இரண்டு விண்ணப்பத்திற்கு தலா 5,000 வீதம் 10,000 வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
  3. B.E.Mech First Year கல்வி உதவி கேட்டு வந்த ஒரு விண்ணப்பத்திற்கு 20,000 ரூபாய் வழங்க  அனுமதி அளிக்கப்பட்டது.
  4. அமானில் கல்விக்குழு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இக்குழு இனிவரும் காலங்களில் கல்வி உதவி கேட்டு வரும் விண்ணப்பங்களை பரிசிலீத்து அதன் முடிவுகளை அமானுக்கு பரிந்துரைக்கும்.
  5. இக்குழுவின் முதல் நடவடிக்கையாக அமான் கல்வி உதவி விண்ணப்பத்தை மறுவடிவமைத்து வெளியிட்டுள்ளது.
  6. கல்வி உதவி கேட்டு விண்ணப்பிவர்கள் இந்த புதிய விண்ணப்பத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். இதில் தெளிவாக மாணவர்களுக்கு வேண்டிய தகுதியும் நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)