அமானின் செயற்குழு கூட்டம் 5-9-2014


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அஸருக்குப் பிறகு அமானின் செயற்குழு கூட்டம்
தேரா துபையில் அமான் ஒருங்கிணைப்பாளர் ஜனாப்
பனி அப்தால் அவர்களின் அஸ்டிகோ  அலுவலகத்தில்
நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜனாப் .முஹம்மது மைதீன் அலியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கு முன்னர் நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டத்தில் அண்ணன் A.P.A.பக்கீர் அஹமது அவர்கள் கலந்து கொண்டது அனைவரும் அறிந்ததே!

சிராஜ் ஹஜரத் அவர்கள் கிரா அத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். ஜனாப் மைதீன் அலியார் அவர்கள் அமானின் பணிகள் சிறப்புடன் நடப்பதாகவும் மேன்மேலும் இது தொடர அல்லாஹ்வை பிரார்த்திப்பதாக கூறி சிறு உரையை நிறைவு செய்தார்.

சிராஜ் ஹஜரத் அவர்கள் தனது உரையில் பேசும்போது கல்விக்காக இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

பிறகு அமானுக்கு வந்திருக்கும் விண்ணப்பங்கள் குறித்து அமான் கல்விக்குழு ஜனாப் சமிஹுன் மஜீத், ஜனாப் ஹாஜி முஹம்மது மற்றும் செயற்குழுவால் விவாதிக்கப்பட்டது. சில விண்ணப்பங்களை அமான் உறுப்பினர்கள் தாங்கள் தத்தெடுத்து கொள்வதாக அறிவித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

 விபரங்கள் வருமாறு 

 

S.NO பயனாளர்கள் விபரம்  DEPARTMENT AMOUNT IN INR SPONSORS
1 MOHAMED
ASH…..
B.E  (Mech)  –  II YEAR Rs. 20,000/- AMAN
2 FIR…………
B.Com  –  I YEAR Rs. 2,500/- Mr.Hasan Aliyar
3 NAF…….
B.Com  –  I YEAR Rs. 2,500/- Mr.Sarfudeen Nana
4 JALA………
V111 TH STD Rs. 6,000/- Mr.Samee
5 MUJ………
B.B.A – I YEAR Rs. 11,975/- Mr. Samee
6 MUN………
B.Com  –  I YEAR Rs. 10,000/- AMAN 

  TOTAL             Rs. 52,975….

பயனாளர்களின் கண்ணியம் கருதி பெயர் மறைக்கபட்டுள்ளது

 

இது போன்ற உதவிகள் மேன்மேலும் அதிகமாக தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ண்ணல் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் 

அடியான் எதுவரை தன் சகோதரனுக்கு உதவியாக இருக்கின்றானோ அதுவரை அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கின்றான்

குறிப்பு:அமான் அடியற்கை மலர் குறித்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

தொடர்புக்கு:சிராஜ் ஹஜரத் 055 7723077

 

(Visited 31 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)