அமான் செயற்குழு கூட்டம் 25/10/2013

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25/10/2013 அன்று அமான் செயற்குழு கூட்டம் அண்ணன் பனி அப்தால் அவர்கள் அலுவலகத்தில் மாலை அஸருக்கு பிறகு நடைபெற்றது. இதில் தலைவர் சிராஜ் ஹஜரத்,உபதலைவர் பஷீர் அஹமது பொருளாளர் ஹாஜா நிஜாமுதீன்,பைத்துல்மால் தலைவர் பனி அப்தால்,ஆடிட்டர் ஹாஜா ஹுசைன்,மண்டல செயலாளர்கள் தன்வீர்தீன், ஹாஜா மைதீன்,முஹம்மது நாஸிர் அவர்கள் கலந்து கொண்டனர்.

சிராஜ் ஹஜரத் அவர்கள் கிரா அத் ஓதி துவங்கி வைத்தார்கள்.

கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

1.அமானுக்கு கல்வி உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 3 விண்ணப்பங்க்களுக்கு ரூபாய் 9,000/- வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

2.மருத்துவ உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 1 விண்ணப்பத்திற்கு ரூபாய் 3,000/- வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

3.பைத்துல்மாலுக்கு சிறுதொழில்உபகரணங்கள் வாங்க உதவிகோரி வந்த விண்ணப்பங்க்களுக்கு ரூபாய் 30,000/- ஒப்புதல்அளிக்கப்பட்டது.

4.ஏற்கனவே அறிவித்தபடி மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியலில் 22 பேருக்கு மாதம் ரூபாய் 500/- வீதம் மொத்தம் ரூபாய் 11,000/- ஆக 1 வருடத்திற்கு ரூபாய் 1,32,000/- வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

5.ஏழைகளின் துயர் துடைத்திட நபி (ஸல்)அவர்களின்  உன்னத திட்டமாம் பைதுல் மால் ஜக்காத் நிதியகத்திற்கு நமது சமுதாய சேவைகளில்அல்லாஹூக்காகஆர்வமுடன் செயல்பட்டுவரும்  நமது அமானின் முன்னாள் தலைவர்களை கொண்ட அமான் பைத்துல்மால் குழு அமைக்க பட்டது.

அமான் பைத்துல் மால் குழு

ஜனாப். A.நூருல் அமீன் 050-4819948

ஜனாப். A.பனீ அப்தால் 050-6556853

ஜனாப். A.R.ஷவ்கத் அலி 050-8433530

ஜனாப் .S.ஹாஜா முபாரக் 050-6715819

ஜனாப். J.இமாமுதீன் (அடியற்கை )

ஜனாப். M.ஹாஜாஹுசைன்(ஆடிட்டர்)

050-6796095

6.அமான் தாயக பிரதி நிதியாக புதுமனைத்தெரு ஜனாப் O.சுல்தான் சம்சுதீன்(கத்தார் பாபு) அவர்களை நியமிக்க ஒப்புதல்
அளிக்கப்பட்டது.

நமதூரில் ஒரு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பல தீமைகளையும் ஒழித்து பல நன்மைகளை ஏவ(உதாரணம்:வட்டி ஒழிப்பு,ஜகாத் செலுத்த தூண்டுதல்,பிறர் நலன் காத்தல்) அமானின் இந்த முயற்ச்சிக்கு நம் ஊர் மக்களின் பொருளாதார உதவியும் மேலான ஆலோசனைகளும்,தொடர் ஆதரவும் தேவைப்படுகிறது.

இந்த பைத்துல்மால் திட்டத்தில் தாங்களும் அல்லாஹ்விற்காக தங்கள் ஜகாத் மற்றும் சதக்கா தொகையை செலுத்தி ஊரின் முன்னேற்றத்திற்காக இணைத்துக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.

(Visited 23 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)