அமான் புதிய நிர்வாகம் பதவி ஏற்பு

Filed in அமான் நிகழ்வுகள் by on September 7, 2013 0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அமான் புதிய நிர்வாகம் பதவி ஏற்பு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று 6-9-2013 சிறப்பாக தொடங்கியது. ஜனாப் ஹாஜா முபாரக் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அமானின் முன்னாள் தலைவர் ஜனாப் ஹாஜா சவுக்கத் அலி அவர்கள் சிறு உரை நிகழ்த்தினார்.

கடந்த மாதம் 2-8-2013 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகம் அல்லாஹ்வின் உதவியோடு இன்று 6-9-2013 பதவி ஏற்றுக்கொண்டது. முன்னாள் தலைவர் ஜனாப் ஹாஜா சவுக்கத் அலி அவர்கள் புதிய தலைவர் ஜனாப் சிராஜ் ஹஜரத் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். aman_6th_new_exe10மேலும் ஜனாப் அனீஸ் தீன் அவர்கள் செயலாளர் பொறுப்பையும் ஜனாப் ஹாஜா நிஜாமுதீன் அவர்கள் பொருளாளர் பொறுப்பையும் ஜனாப் பரக்கத் அலி அவர்கள் ஆடிட்டர் பொறுப்பையும் ஏற்றனர். உதவி தலைவர் ஜனாப் பசீர் அஹமது அவர்கள் தாயகம் சென்று இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மண்டல செயலாளர்களாக துபைக்கு ஜனாப் சகோதரர் இனாயத்துல்லாஹ்,அபுதாபிக்கு சகோதரர் ஹாஜி,ஷார்ஜாவிற்கு சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள்.

முன்னாள் பொருளாளரும் இந்நாள் பொருளாளரும் ஆகிய ஜனாப் ஹாஜா நிஜாமுதீன் அவர்கள் முன்னாள் நிர்வாகத்தின் கணக்கை ஒப்படைத்தார். கணக்கு வழக்கு விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் இவரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

புதிய நிர்வாகம் பதவி ஏற்றவுடன் அமானுக்கு வந்த உதவித்தொகை விண்ணப்பங்கள் பரிசிலிக்கப்பட்டு  பத்து விண்ணப்பங்களுக்கு இந்திய மதிப்பில் 1,60,900/=உதவித்தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.

மேலும் கீழ்க்கண்ட விஷயங்கள் பேசப்பட்டது.

தாயக பிரதிநிதியாக புதிய இரண்டு நபர்களை தேர்ந்து எடுப்பது.

புதிய மண்டல செயலாளர்கள் எடுப்பது.

சந்தா வசூல் குறித்து.

பின்னர் ஜனாப் சிராஜ் ஹஜரத் அவர்களின் சிறிய பயானுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

 

(Visited 19 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)