அல்-ஐன் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 19-09-2014

Filed in அமான் நிகழ்வுகள் by on September 21, 2014 0 Comments

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மிக நீண்ட நாட்களாக அல்-ஐன் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு அல்லது சந்திப்பு நடத்தப்படாமலே இருந்து வந்தது. அல்-ஐன் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ வேண்டும் என்று இறைவன் நாடிவிட்டான்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 19-09-2014 அமான் நிர்வாகிகள் சிராஜ் ஹஜரத்,பஷீர் அஹமது ,ஹாஜா நிஜாமுதீன் அல்-ஐன் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.12:15 மணிக்கு அல்-ஐன் நெருங்கவும் ஜும்மா தொடங்கவும் சரியாக இருந்தது. தொழுது முடித்த பின்னர் சகோதரர் ரிபாயீ அவர்களை தொடர்பு கொண்டதும் அவர் வந்து அவரின் ரூமிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நமது அமான் சகோதரர்கள் ஜியாவுர் ரஹ்மான், அன்வர்தீன்,சித்தீக்,இப்ராஹீம்,கவ்துல் ஹமீது மற்றும் மற்ற ஊர் சகோதரர்கள் 3 பேரும் சலாம் கூறி வரவேற்றனர்.

நமது ஊர் மக்களை ஒரே இடத்தில் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான்.

அவர்களின் விருந்து உபசரிப்பு முடிந்ததன் பின்னர் சிறு உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சகோதரர் ஜுயாவுர் ரஹ்மான் அவர்கள் கிரா அத் ஓதி துவங்க ரிபாயி அவர்கள் வரவேற்புரை வழங்க சிராஜ் ஹஜரத் அவர்கள் சிறு பயான் செய்தார்கள்.

அதன் பின்னர் அல்-ஐன் மண்டல செயலாளராக சகோதரர் ரிபாயிதீன் அவர்களும் செயற்குழு உறுப்பினர்களாக சகோதரர் ஜியாவுர் ரஹ்மான் மற்றும் அன்வர்தீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பஷீர் அஹமது அவர்கள் நன்றியுரையுடன் சந்திப்பு இனிதே நிறைவுற்றது.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

அல்ஹம்துலில்லாஹ் !!!

(Visited 24 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)