அமான் அபுதாபி மண்டல பொதுக்குழு

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் 10-1-2014 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு அடியற்கை மர்கஸ்,மதினா ஜாயித்,அபுதாபியில் அமான் அபுதாபி மண்டல பொதுக்குழு (உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்) மிக இனிதாக நடைந்தேறியது.

 

நிகழ்ச்சியின் முழு விபரம்

நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல செயலாளர் ஜனாப்.ஹாஜி முஹம்மது அவர்கள் தலைமை தாங்க

ஜனாப்.விலாயத் ஹுஸைன் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.

ஜனாப் ஷேக் தாவுது அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஜனாப் அனீஸ்தீன் அவர்கள் அமானின் கடந்த 5 மாத கால செயற்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜனாப் ஹாஜா நிஜாமுதீன் அவர்கள் அமானின் பொருளாதார நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜனாப் பனி அப்தால் அவர்கள் கடந்த 5 மாத கால பைத்துல்மால் பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜனாப் ஹாஜா முபாரக் அவர்கள் அமானின் கடந்த கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து உரை ஆற்றினார்.

இதன் பின்னர் உறுப்பினர்கள் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை நேரம் நடைபெற்றது.

ஜனாப்.ஜெகபர் சாதிக் கீழசெட்டி தெரு அவர்கள்

அமான் பைத்துல்மால் மூலம் அமீரகத்தில் கஷ்டப்படும் அமான் உறுப்பினர்களுக்கு கடன் உதவி செய்யப்படவேண்டும், விசிட் விசாவில் வருபவர்களுக்கு வழிக்காட்டல் வழங்கப்பட வேண்டும் என்றும் பதிவு செய்தார்.

ஜனாப்.விலாயத் ஹுசைன் அவர்கள்

ஊரில் வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொகை அதிகபட்சம் அதிரிக்கப்பட வேண்டும்,அமான் மூலம் கல்வி உதவி பெற்று வேலை கிடைக்கும் போது அமானுக்கு உதவிட வேண்டும்,தர்பியா முகாம் நடத்தி கல்வி வேலை வாய்ப்பு முதலான விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பதிவு செய்தார்.

ஜனாப்.அசன் அலியார் அவர்கள்

ஊரில் வட்டிக்கடன் வாங்குவோர் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நமது கடன் வழங்கும் திட்டத்தை அதிகபடுத்தி வட்டி கொடுப்போர் நமது ஊரில் வராத அளவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பதிவு செய்தார்.

ஜனாப்.ஹாஜி முஹம்மது அவர்கள்

உறுப்பினர்கள் தாங்களாகவே முன்வந்து சந்தாவை தர வேண்டும், நம்மிடம் யாரும் கேட்கவில்லை என்று இருந்து விடக்கூடாது என்ற கருத்தை பதிய வைத்தார்.

ஜனாப்.பனி அப்தால் அவர்கள்

நமது ஊரின் பக்கத்து ஊரான கொடிக்கால்பாளையத்தில் ஜமாத் மூலமே பைத்துல்மால் தொடங்க்கப்பட உள்ளதாகவும் என்ஜினியிரிங் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாகவும் இது போன்ற வாய்ப்புகளை நாமும் ஏற்படுத்த வேண்டும் என்று பதிவு செய்தார்.

ஜனாப்.ஹாஜா நிஜாமுதீன் அவர்கள்

உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை தயங்காமல் உடனுக்குடன் நிர்வாகிகளை சந்தித்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கவேண்டும், அல்லது நமது இணையதளத்திலோ இணைய மன்றத்திலோ பதிவு செய்யலாம் என்று பதிவு செய்தார்.

ஜனாப்.சவுக்கத் அலி அவர்கள்

அமான் உறுப்பினர்கள் கொடுக்கும் சந்தாவை வைத்துதான் இத்துனை பணிகளும் நடந்து வருவதால் அனைவரும் சந்தாவை கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

சிராஜ் ஹஜரத் அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

புதிய அபுதாபி மண்டலசெயலாளராக ஹாஜானி அவர்களும் அபுதாபி மண்டல செயற்குழு உறுப்பினராக ஜெகபர் சாதிக் அவர்களும் விலாயத் ஹுசைன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் ஊரில் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

ஜனாப் ஜலாலுதீன் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

 

 

(Visited 24 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)