ஆறாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

karachi darbar restஅமானின் 6 ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் இப்தார் நிகழ்ச்சி இன்று  2-8-2013 வெள்ளிக்கிழமை துபையில் கராச்சி தர்பார் ரெஸ்டாரன்ட்டில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது.

கடுமையான வெப்பம், நோன்பின் தாக்கம் இவை அனைத்தையும் மீறி நமது அமான் சகோதரர்கள் மாலை 4 மணி முதல் கராச்சி உணவகத்தின் முன் குழும தொடங்கினர். அசர் தொழுகைக்கு பிறகு அமான் கெளரவ தலைவர் அண்ணன் நூருல் அமீன் அவர்களின் தலைமையில் சகோதரர் நூர் முஹம்மது அவர்களின் கிராஅத்துடன் விழா இனிதே துவங்கியது.

அண்ணன் நூருல் அமீன் அவர்கள் தமது வரவேற்புரையில் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.மேலும் இம்மாதம் 25ந் தேதி அடியக்கமங்கலத்தில் துபை சீமான் அமைப்பினர் நடத்தும் பெண்கள் விழிப்புணர்வு மாநாடு இன்ஷா அல்லாஹ் நடைபெற இருப்பதாக அறிவித்தார்கள். அல்ஹம்து லில்லாஹ் !

அதனை தொடர்ந்து அமான் தலைவர் A.R.ஹாஜா சவுக்கத் அலி அவர்கள் உரை நிகழ்த்தும் போது அமான் உறுப்பினர்களின் நல்லாதரவு கொண்டு அமானின் சார்பாக கிட்டத்தட்ட 7,00000 ரூபாய் 6thMeeting-IftharEvent49உதவித்தொகை வழங்க முடிந்தது என்றும் இது வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் அமானின் பணிகளை பூர்த்தி செய்ய தாயகத்தில் ஜனாப் சாதிக் அலி, ஜனாப் ஹாஜா முபாரக்,ஜனாப் இமாமுத்தீன் அவர்களின் பங்ககளிப்பும் மகத்தானது என கூறினார். அமான் அலுவலகம் துவங்கியதையும் அதற்கான மின் இணைப்பு பெற போராடியதையும் குறித்து நினைவு கூர்ந்தார்.

அமான் பைத்துல்மால் உதவி தலைவர் ஜனாப் சிராஜ் ஹஜரத் அவர்கள்6thMeeting-IftharEvent38 சந்தா தொகையின் முக்கியத்துவத்தை குறித்து விரிவான உரையாற்றினார். உறுப்பினர்கள் தரும் சந்தா தொகை மிக பெரிய அளவில் உதவி பெரும் தொகையாக மாற்றப்படுகிறது, இதன் மூலம் நம் தாயகத்தில் எத்தனை நபர்கள் கல்வி கற்கவும் மருத்துவ உதவியும் பெறுவதற்கு வழி வகுக்கிறது என்று விவரித்தார். மிக விரைவில் அடியற்கை ஏழைகளே இல்லாத ஊராக மாற வேண்டும் இன்ஷா அல்லாஹ் என்று துஆ செய்தார்கள்.

அமான் பொருளாளர் S.ஹாஜா நிஜாமுதீன் அவர்கள் கடந்த அமானின் கணக்கு வழக்குகளை உறுப்பினர் முன் எடுத்துரைத்தார். அதன்படி அமானின் ஐந்தாம் ஆண்டு பணி தொடங்கியபோது இருந்த கையிருப்பு  21,487 திர்ஹம் ,29-7-2013 வரை உள்ள வரவு நன்கொடையாக 2,680/- திர்ஹம், சந்தாதொகையாக கிடைக்கப்பெற்றது 13,375/- திர்ஹம் ஆக மொத்தம் 16,055/- திர்ஹம். இதிலிருந்து மருத்துவ உதவியாக 5,627.75/- திர்ஹமும் கல்வி உதவியாக 21,990.75/- திர்ஹமும் ஆக மொத்தம் 27,618.50/- திர்ஹம் வழங்கப் பட்டது. மற்றும் நிர்வாக செலவாக 2,208/- திர்ஹம் ஆக மீதி கையிருப்பு அன்று 7,715.50/- திர்ஹம் உள்ளது என்று கூறினார்.

அமான் பைத்துல்மால் கணக்கு வழக்குகளை ஜனாப் ஹாஜா ஹுசைன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதன் விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

பிறகு அமான் பைத்துல்மால் தலைவர் ஜனாப் பனி அப்தால் அவர்கள் அமான் பைத்துல்மாலின் பணிகள் குறித்தும் அதன் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விரிவாக விளக்கினார்.

விழாவின் சிறப்பம்சமாக நமதூர் மகாஜனசபை துணைத்தலைவர் அ.சலாஹுதீன் அவர்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினருக்கு அலியார் குருப் சார்பாக ஒரு சிறிய அன்பளிப்பு வழங்கப்பட்டது.

கடைசியாக புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர்: H.S.J சிராஜ்தீன் ஹஜரத்.

உபதலைவர்: A.P.A.பஷீர் அஹமது

செயலாளர்: A.அனீஸ்தீன்

பொருளாளர்: S.ஹாஜா நிஜாமுதீன்

ஆடிட்டர்: S.பரக்கத்தலி

மற்ற நிர்வாகிகளை மண்டல வாரியாக கூட்டம் நடத்தி தேர்ந்தெடுத்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜனாப் M.அமீர்தீன் அவர்கள் இந்த விழா வை தொகுத்து வழங்கினார்கள்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

(Visited 46 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)