8 ஆம் ஆண்டு விழாவும் பொது குழு…

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபாயால் 20-2-2015 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு தேரா துபாய் அல் ரபீ ஹோட்டலில் அமான் அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 8 ஆம் ஆண்டு விழாவும் பொது குழுவும்
சிறப்பாக நடைப்பெற்றது. “அல்ஹம்துலில்லாஹ்”.

நற்பணிகளில் ஈடுபடுவதிலும் நல்ல காரியங்களில் விரைந்து செயல்படும் தன்னார்வமிக்கவர்கள் நிறைந்த
அடியக்கமங்கலம் சகோதரர்கள் சங்கமித்தார்கள்.நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகின.
முதல் அமர்வு 10:30 துவங்கியது.
காலை முதல் அமர்வில் அமீரக ஜும்மா குத்பாவின் தமிழ் மொழி பெயர்ப்பாக ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது.
ஜும்மா தொழுகைக்கு பின் அடியற்கை பரக்கத் கேட்டரிங் தயாரிப்பில் அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.

இரண்டாவது அமர்வு:2:30 துவங்கியது.

ஜனாப். அனீசுதீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இனியகுரலில்

ஜனாப். முசாகுதீன் கிராஅத் ஓதிட ஜனாப். கமாலுதீன் குர்ஆன் தமிழாக்கம் வாசித்தார்.

நிகழ்ச்சிக்கு ஜனாப். பனி அப்தால் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.

ஜனாப். சர்புதீன் நானா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.அடியற்கை மூத்த சகோதரர்கள் முன்னிலை வகித்தார்கள்.

ஜனாப்.ஹாஜா நிஜாம் அவர்கள் 2014 க்கான வரவு செலவு ஆண்டறிக்கை சமர்பித்தார்கள்.

ஜனாப். AI.சேக் தாவூத் அவர்கள் அமான் பொதுகுழுவின் நோக்கம் என்ற தலைப்பிலும்

ஜனாப். சமீஹுன் மஜீத் அவர்கள் அமான் வழங்கிய கல்வி என்ற தலைப்பிலும்

ஜனாப். அமீர் சாகுல் அவர்கள் மருத்துவத்தில் அமான் என்ற தலைப்பிலும்

ஜனாப். ஹாஜா முபாரக் அவர்கள் அமான் பைத்துல்மாலின் உதவிகள் என்ற தலைப்பிலும்

மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் ஜனாப். ஹுசைன் பாஷா அவர்கள்
“உணர்வாய் உன்னை, வெற்றி நமதே” என்ற தலைப்பிலும்,

சிந்தைக்கு விருந்தளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்கள்.

கடல் பறவை என்ற ஆவன படமும் வெளியிடப்பட்டது.

2015 க்கான அமான் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பின்வருமாறு

தலைவர் : ஜனாப். சமீஹுன் மஜீத் 0507653805
துணை தலைவர்: ஜனாப். PK சுல்தான் 0507865921
பொதுசெயலாளர் : ஜனாப். ஹாஜா தன்வீர் 0554339304
துணை பொது செயலாளர்கள்
ஜனாப். ஜாகிர் ஹுசைன்
ஜனாப். ஹாஜா சிராஜூதீன் 050 1681833
ஜனாப். ஜெகபர் சாதிக் 0557582836
பொருளாளர் : ஜனாப். ஜபீன் 050 8485672
தணிக்கையாளர்: ஜனாப். கமாலுதீன் 055 7380380

ஆகியோர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

புதிய தலைவரின் நன்றியுரையுடனும் மற்றும் துவாவுடணும்
கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்!

சிறப்புடன் சமுதாய சேவை செய்திட கருணை மிக்க அல்லாஹ் நல்லுதவி செய்வானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பில் ஆலமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

(Visited 59 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)