2016 – 2017 அமான் பென்ஷன் உதவி திட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்கிடுவீர்!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 42 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே.

2015-2016 – 42 ஸ்பான்சர்கள் 

இதுவரை நம்முடைய கோரிக்கைகளை மனதில் கொண்டு இதுவரை 42 ஸ்பான்சர்கள் அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு அவர்களுடைய ஆதரவையும் அவர்களுடைய ஹதியாவை  செலுத்தியும் விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்ய வேண்டி துஆ செய்தவனாக இருக்கின்றேன்.

2016-2017 – 60 ஸ்பான்சர்கள் தேவை 

அதனை தொடர்ந்து இந்த வருடமும் 2016 – 2017 இத்திட்டத்தை தொடர்வெதென்று அமான் நிர்வாகம் முடிவு செய்துள்ளோம்.

ஆதலால் அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு தங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்குமாரும், இந்த ரமலான் முதல் தொடங்கி அடுத்த ரமலான் வரை இந்த தொகையை அளிக்க ஏதுவாக சகோதரர்கள் இந்த உதவியில் பங்களிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு விண்ணப்பத்திற்கான உதவித்தொகை இந்தியன் ரூபாய் 6000/=

நீங்கள் ஸ்போன்சார் செய்ய விரும்பினால் உங்களுடைய விபரங்களை

(பெயர், மொபைல் நம்பர் / ஈமெயில்) எங்களுக்கு அனுப்புக!

+971-52-55 99 052 (ஒரு மிஸ்டு கால் போதும்)

ஈ-மெயில்: amanaym@gmail.com

 

வஸ்ஸலாம்

-தலைவர் அமான்

 

(Visited 104 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)