வெகு விமர்சையாக நடந்த அமான் 10- ஆம் ஆண்டு பொதுக்குழு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

அல்ஹம்துலில்லாஹ் !

13/04/2017 – துபாய்.

கடந்த 8 ஏப்ரல் 2017, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை, தேரா துபாயில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 10-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

ஜனாப். சிறுவன். நவ்ஃபல்  அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். A. R. ஹாஜா ஷவுகத்  அலி முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது.

கூட்டத்தில் ஜனாப். A. P. A. பஷீர் அஹமது, துணை தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். E. N. A. நூருல் அமீன், கௌரவ தலைவர் அவர்களின் நற்செய்தி வாசிக்கப்பட்டது.

ஜனாப். ஹாஜா ஷவ்கத் அலி, ஒருங்கிணைப்பாளர்; ஜனாப். பனி அப்தால், ஒருங்கிணைப்பாளர் ஜனாப். சிராஜ் ஹஜ்ரத், முன்னாள் தலைவர்   ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் ஜனாப். ஹாஜா முபாரக் மற்றும் ஜனாப். ஹாஜா நிஜாம், “10-ஆம் ஆண்டு சிறப்பு மலர் ஆக்கம்” அறிமுக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, பிறகு “மலர் வெளியீடும்” நடை பெற்றது.

பிறகு பத்தாம் ஆண்டை சிறப்பிக்க பட்டி மன்றமும்  சிறப்பு கருத்தரங்கமும்  வெகு விமர்சையாக நடை பெற்றது.

இந்த பொதுக்குழுவில் நமது 10-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் ஜனாப். முஹமது ஹாரிஸ் , தணிக்கையாளர் , அமான் – ஆண்டு வரவு செலவு கணக்கு படிக்க ; ஜனாப். ஜனாப். சமீஹுன் மஜீத், தலைவர், அமான் நன்றியுரை கூற, பரிசு குலுக்கலுடன் விழா இனிதே நிறைவேறியது.

கூட்டத்தின் நடுவில், அமானுக்கு வந்த அமான் பஹ்ரைன், தாயக பிரதிநிதிகளின் வாழ்த்து சேதிகள் காணொளியாகவும் மற்றும் ஒலியாகவும் காட்டப்பட்டது.

பட்டி மன்றத்தை ஷேக் தாவூத் அவர்களும், கருத்தரங்கத்தை அல் அமீன் அவர்களும் மிக சிறப்பாக நடத்திச்சென்றனர், நிகழ்ச்சிகளை ஜனாப். அமீர் J. மற்றும் அனீசுதீன் தொகுத்து வழங்கினார்.

அது சமயம் அடியக்கமங்கலம் நண்பர்கள், அமான் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் அமான் நன்றியை தெரிவித்துகொள்கிறது. ஜசாக்கல்லாஹ்!

-நிர்வாகம், அமான்

சில புகைப்படங்கள்:

 

 

 

 

(Visited 116 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Bani abthal says:

    எல்லாம் சரி. புதிய நிர்வாகத் தேர்வு, புதிய நிர்வாகிகள் பற்றிய தகவல்கள் இடம் பெறவில்லையே? ஏன்? புதிய நிர்வாகிகளின் பெயர்களையும் சேர்த்து மறுபதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)