அமான் – வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா!

bismillah

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை(17/03/2017) அடியக்கமங்கலம் முஸ்லீம் அசோசியேஷன் (அமான்) அலுவலகத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

FB_IMG_1490250408606

20170317_175606 20170317_175610 20170317_175631 20170317_175849

அவ்விழாவிற்கு அண்ணன் இமாமுதீன், கு.இ.அஹமது கபீர், சபியுர் ரஹ்மான் புதுத்தெரு ஜாஹிர் ஹுசைன்  A.L. முஹம்மமது ஃபைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமானின் அடியற்கை பிரதிநிதி அண்ணன் சாதிக்அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள், ரயிலடித்தெரு பள்ளி இமாம் அத்தீக் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள். அமானின் மற்றொரு அடியற்கை பிரதிநிதியான அண்ணன் J.M.A. தாவுதப்பா அவர்களும்,கத்தார் அமானின் முன்னாள் தலைவர் முஹம்மது நத்தருதீன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கடந்த 35 வருடங்களாக அடியற்கையில் உள்ள அனைத்து தெருக்களிலும், இரு மையத்தாங் கொல்லையிலும் மரங்களை நட்டு பசுமைப்புரட்சியை ஏற்படுத்திய புதுத்தெரு அஹமது கபீர் அத்தா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி அமான் கௌரவித்தது.

அமான் தலைவர் சமீஹுன் மஜீது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.

அடியற்கை ஜமாத்தார்கள் அனைவரும் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

(Visited 31 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)