28/03/2015 – அமான் சகோதரர்களுக்கு, தலைவரின் மடல்!

bismillah

28/03/2015

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம்முடைய அமான் இணையதளம் வழியாக உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.

இந்த நவீன உலகத்தில் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்து கருத்து பரிமாற்றங்கள் நடந்ததை விட, அதிகமதிகம் சமூக வலைத்தளங்களிலும், வாட்ச் அப், ஸ்க்கைப் போன்ற தொலைதொடர்பு மென்பொருள்கள் வழியாகவே நாம் தொடர்பில் உள்ளோம்.

நமது அமானுடைய தொடர்புகளிலும், நாம் ஏன் இவற்றை பயன்படுத்தி கொள்ளக் கூடாது? இந்த எண்ணத்தின் எதிரொலியாக, நமதூர் செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்த அமான் குறுந்தகவல் சேவை (SMS) தொடங்கி உள்ளது. இதன் மூலம் நமதூர் செய்திகளை துரிதமாக உங்களிடத்தில் கொண்டுவந்து சேர்ப்பதே நமது முதல் நோக்கம்.

அல்ஹம்துலில்லாஹ், கடந்த 22/03/2015 மற்றும் 26/03/2015 வஃபாத் செய்திகளை உங்களுக்கு அனுப்பி உள்ளோம், இச் சேவைக்கு நீங்கள் தந்திருக்கும் ஆதரவுக்கு, உங்களுக்கும் வல்ல இறைவனுக்கும் நன்றி.

மேலும் இந்த சேவையில் இணைய விரும்பும் அடியக்கமங்கல சகோதரர்கள், எந்த நாட்டில் இருந்தாலும்  இணைந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்.

முக்கியமாக, முன்பு நீங்கள் அமானில் பதிவு செய்த மொபைல் நம்பரை மாற்றி இருந்தால், கட்டாயமாக எங்களுக்கு தெரிய படுத்தவும்.

மேலும் நாம் நமது நிர்வாகத்துக்கிடையே நல்ல தொடர்பு ஏற்படுத்தும் நோக்கில், வாரம் ஒரு மணி நேரம் ஸ்கைப் மீட்டிங் தொடங்கி உள்ளோம்.

இன்ஷா அல்லாஹ், இது போன்று வரும் மாதங்களில் மண்டல செயலாளர்கள், அமானுடைய முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் (அவர்கள் விருப்பத்தின் பேரில்) இணைக்கவும், அவர்களுடைய ஆலோசனைகளை, குறை நிறைகளை பெற்று கொள்ள விழைந்துள்ளோம்.

நமது ஊரிலிரிந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நாம் அனைவரின் பொறுப்பாகும்.

நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். உங்களுடைய கஷ்ட நஷ்டங்களுக்கிடையே நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு பைசாவும் உரியவரிடம் சேர்ப்பதற்க்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாம் வல்ல நாயன் நம் அனைவருக்கும் உடல் மற்றும் பொருள் வளத்தை தந்திடுவானாக. ஆமீன்.

அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலியும் வழங்கிடுவானாக. ஆமீன்.

புதிய அமான் செய்திகளுடன் அடுத்தமுறை தங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை தந்தருள இறைவனை வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.

சமீஹுன் மஜீத். அ
தலைவர், அமான்

+971 50 7653805

(Visited 45 times, 1 visits today)

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Imamudeen.J says:

    புதிய நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.அமானின் செயல்பாடுகள் மிக தீவிரமாக நடைபெறுவது மனதுக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் பணிகள்.

  2. Nijamudeen.S says:

    மாஷா அல்லாஹ்! Electronic Communication ஐ சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள அமான் புதிய நிர்வாகம் முடிவு செய்திருப்பது வரவேற்க தக்கது. அனைத்து சகோதரர்களும் ஆதரவு தருவார்கள் என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)