04/04/2015 – அமான் சகோதரர்களுக்கு, தலைவரின் மடல்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ

தேதி: 04/04/2015

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம்முடைய அமான் இணையதளம் வழியாக மீண்டும் உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமோடு இருக்க துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

நமது நிர்வாகத்துக்கிடையே ஸ்கைப் மீட்டிங் இரண்டு வாரங்கள் நடை பெற்றது, அது சமயம் நாம் கேட்டு கொண்டதற்கு இணங்கி முன்னால் நிர்வாகிகள் மற்றும் அமான் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக
செலவு செய்தமைக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

இன்ஷா அல்லாஹ், இது போன்று வரும் மாதங்களில் மண்டல செயலாளர்கள், உறுப்பினர்கள் (அவர்கள் விருப்பத்தின் பேரில்) இணைக்கவும், அவர்களுடைய ஆலோசனைகளை, குறை நிறைகளை பெற்று கொள்ள விழைந்துள்ளோம்.

நமது தாயக அலுவலகத்தில் இருந்து முன்பு ரூபாய் 35500/- நால்வருக்கு நாம் உதவி செய்த விபரமும், பெற்றுக்கொண்ட செய்தியும் வந்து சேர்ந்தன. அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் நமது ஊரிலிரிந்து 23/03/2015 அன்று மூன்று புதிய மனுக்களும், ஒரு பழைய மனுவின் மீதான குறிப்புகளும் நமது தாயக பிரதிநிதிகளின் குறிப்போடு வந்து சேர்ந்தன. நமது தாயக பிரதிநிதிகள் செய்யும் இந்த மகத்தான பணிக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

உடனடியாக, முதலில் ஸ்கய்ப் மீட்டிங் வழியாகவும், பின்னர் ஈமைல் வழியாகவும் இந்த மனுக்கள் அனைத்தும் தனித்தனியாக அலசி ஆராயப்பட்டு ஆலோசனை கேட்கப்பட்டு பின்னர் முடிவெடுக்கப்பட்டன. இதன் மூலம் நம்முடைய தாயக அலுவலகத்துக்கும், பிரதிநிதிகளுக்கும் நம்முடைய மனுக்களின் மீதான முடிவுகளை துரிதமாக தெரிவிக்கலாம் என்பது ஒன்றே நமது நோக்கம்.

இதன் முடிவில் நமதூர் ம. பே. அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- நம்முடைய நிதியிலிருந்தும் 5000/- தனி நபர் நிதியிலிருந்தும் (SPONSOR) மொத்தம் ரூபாய் 15000/- வழங்க முடிவெடுத்து, அப்பணம் நமது தாயக பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எல்லாம் வல்ல இறைவன் அந்த பயனா ளிக்கு விரைவில் குணம் அளிக்க நாம் எல்லோரும் துஆ செய்வோம்.

இக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் நமது தாயக பிரதிநிதிகள் ஈமைல் வழியாக மேற்கண்ட நபருக்கு உதவி பணம் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்!

“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.” அல் குர்ஆன் 2:271.

இது போன்ற உதவிகளை தொடர்ந்து நம் மக்களுக்கு செய்திட, எல்லாம் வல்ல நாயன் நம் அனைவருக்கும் உடல் மற்றும் பொருள் வளத்தை தந்திடுவானாக. ஆமீன்.

உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றை மற்றும் மறந்து விடாதீர்கள், நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

நடந்து முடிந்த ஷார்ஜா மண்டல கூட்டம் மற்றும் புதிய அமான் செய்திகளுடன் அடுத்த வாரம் எழுதும் வாய்ப்பை தந்தருள வல்ல இறைவனை துஆ செய்தவனாக இந்த மட லை நிறைவு செய்கிறேன்.

வஸ்ஸலாம்

சமீஹுன் மஜீத். அ
தலைவர், அமான்

+971 50 7653805

(Visited 26 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Haja Moinudeen A. says:

    மாஷா அல்லாஹ ! வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)