அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம்

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம்

ஜசாக்கல்லாஹ்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 22 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வருடம் 38 மனுதாரர்கள் மாதாந்திர உதவி கேட்டு அமானுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர்.

ஜசாக்கல்லாஹ்!

இதுவரை நம்முடைய கோரிக்கைகளை மனதில் கொண்டு இதுவரை 34 ஸ்பான்சர்கள் அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு அவர்களுடைய ஆதரவையும், மேலும் சிலர் அவர்களுடைய ஹதியாவை  செலுத்தியும் விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்! அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்ய வேண்டி துஆ செய்தவனாக இருக்கின்றேன்.

அமானுடைய  பென்ஷன் திட்டதிற்க்கு மனு செய்து விண்ணப்பித்த 38 நபர்களில் 4 பேர் இன்று நம்மில் இல்லை, ஆம். வபாத் ஆகி விட்டார்கள்!

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

இதனால் நம்முடைய நிதி திரட்டும் முதல் கட்ட நடவடிக்கைகள் நிறைவேறியுள்ளது. அல்ஹம்துளில்லாஹ். ஆகவே இந்த ரமலான் முதல் தொடங்கி அடுத்த ரமலான் வரை இந்த தொகையை அளிக்க முடிவு செய்துள்ளோம்.

மீண்டும் ஒருமுறை அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்ய வேண்டி துஆ செய்தவனாக இருக்கின்றேன்.

அடுத்த வாரத்தில் ரமதான் தொடங்க இருப்பதால், வல்ல அல்லாஹ் நம்முடைய அமான் பணிகளுக்கு உரு துணையாய் இருக்கும் அனைத்து மக்களையும் அவர்கள் செய்யும் அணைத்து நல்லமல்களையும்  பொருந்தி கொள்வானாக!. ஆமீன்.

நமதூர் மக்கள், அமான் உறுப்பினர்கள், அமான் துபாய் மற்றும் தாயக நிர்வாஹிகள் அனைவருக்கும் என்னுடைய ரமதான் நல் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
தலைவர்,
அமான்.
13/JUN/2015

(Visited 69 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Nizam says:

    அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.இவர்களின் துஆ அனைவருக்கும் பரக்கத்தை தருவதற்கு இறைவன் போதுமானவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)