அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20/12/2013

Filed in அமான் நிகழ்வுகள் by on December 23, 2013 0 Comments

 அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வாரம் 20/12/2013 அன்று அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி யின் தொடர்ச்சியாக அமான் தலைவர் சிராஜ் ஹஜரத், உபதலைவர் A.P.A.பஷீர் அஹமது,பொருளாளர் S.ஹாஜா நிஜாமுதீன்,ஷார்ஜாஹ் மண்டல செயலர் N.ஹாஜா மைதீன் ஆகியோர் இணைந்து ஷார்ஜாஹ்வில் பரக்கத் கேடெரிங் B.சர்புதீன்,அலியார் குரூப் A.தவுலத் முஹம்மது மற்றும் A.கெளது முஹம்மது ஆகியோரை சந்தித்து அமானின் நிதி மற்றும் அமான் செயல் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.

அதன் பிறகு அமானின் முன்னாள் செயலர் M.அமீருதீன்,பைத்துல்மால் பொருளாளர் M.ஹாஜா ஹுசைன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு அபுதாபி அமான் உறுப்பினர் ஜனாப் ஹசன் அலியார்,அன்சாரி மற்றும் குத்புதீன் அவர்கள் கலந்து கொண்டனர். சிராஜ் ஹஜரத் அவர்களின் கிரா அத்துடன் கூட்டம் துவங்கி முன்னுரையாக அமீருதீன் அவர்கள் அமானின் வளர்ச்சி குறித்து பேசினார்கள்.

ஹசன் அலியார் அவர்கள் தனது உரையில் கல்வி விழிப்புணர்வு குறித்தும் மாணவர்களுக்கு ப்ரீ கவுன்சிலிங் நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.சிராஜ் ஹஜரத் அவர்களின் இறுதி உரையோடு கூட்டம் இனிதே முடிவுற்றது.

பின்னர் M.J.சர்புதீன் அவர்களை சந்தித்து பேசி விட்டு இந்த வார “அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி” இனிதே செய்யப்பட்டது.

(Visited 18 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)