அமானின் தாயக அலுவலகத்தில் அமான் தீர்மானங்கள் அரங்கேற்ற நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று மாலை 16-11-2013 அமானின் தாயக அலுவலகத்தில் கடந்த அமான் செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரங்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த தீர்மானங்கள் குறித்து ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். நினைவிற்கு மீண்டும்

தீர்மானங்கள்

1.அமானுக்கு கல்வி உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு ரூபாய் 9,000/- வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

2.மருத்துவ உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 1 பயனாளிக்கு ரூபாய் 3,000/- வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

3.பைத்துல்மாலுக்கு சிறுதொழில்உபகரணங்கள் வாங்க உதவிகோரி வந்த விண்ணப்பங்களில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 30,000/- ஒப்புதல்அளிக்கப்பட்டது.

4.ஏற்கனவே அறிவித்தபடி மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகளின் பட்டியலில் 22 பேருக்கு மாதம் ரூபாய் 500/- வீதம் மொத்தம் ரூபாய் 11,000/- ஆக 1 வருடத்திற்கு ரூபாய் 1,32,000/

5.அமானிலிருந்து கடனுதவியாக 4 பேருக்கு ரூபாய் 35,000/ வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள்

இந்நிகழ்ச்சிக்கு அடியற்கை ஜமாத் தலைவர் S.M.பஷிருதீன், ஊராட்சி மன்ற தலைவர் S.M.J.முஹம்மது நிஜாமுதீன், முன்னாள் ஜமாத் தலைவர் J.M.A.முஹம்மது தாவுது, அமானின் தாயக பிரதி நிதிகள் A.சாதிக் அலி, O.சுல்தான் சம்சுதீன், பைத்துல்மால் குழு உறுப்பினர் J.இமாமுதீன், அமான் உறுப்பினர் A.ஹாஜி முஹம்மது  மற்றும் அமான் தாயக அலுவலக பொருப்பாளர் A.ஹாஜா முஹம்மது நத்தர் அவர்கள் கலந்து கொண்டனர்.

பயனாளிகள் அனைவரும் பங்கேற்று உதவிகளை பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து மழை என்றும் பாராமல் சிறந்த முறையில் நடைபெற உதவியாக இருந்த தாயக பிரதிநிதி ஜனாப் O.சுல்தான் சம்சுதீன் மற்றும் J.இமாமுதீன் அவர்களுக்கு நன்றி.

மேலும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்து தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

அமான் நிர்வாகம்.

 

(Visited 34 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)