அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு…! தலைவரின் மடல், 18/04/2015

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…).

மீண்டும் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக,

நம்முடைய அமான் இணையதளம் வழியாக மீண்டும் உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமோடு இருக்க துஆ செய்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

கடந்த வாரம் 9/4/2015 அன்று அபுதாபி மண்டல கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற  உறுதுணையாக இருந்த வல்ல இறைவனுக்கும், துணை பொது செயலாளர் ஜெஹபர் சாதிக்,  ஜனாப். ஹாஜா முபாரக் மற்றும் கலந்து கொண்டு சிறப்பித்த அபுதாபி மண்டல  உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

நம்முடைய அழைப்பை ஏற்று அமானுடைய ஒருங்கிணைப்பு கூட்டத்திற்க்கு வந்து, மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

கூட்டத்தில் அபுதாபி மண்டல ஜனாப். ஹாஜா முபாரக்,  ஜனாப். சிராஜ் ஹஜ்ரத்,  ஜனாப். ஷேக் தாவூத், துணை பொது செயலாளர் ஜெஹபர் சாதிக் உரை நடத்தினர்  மற்றும் சில கோரிக்கையும் வைத்தனர். நாம் அவர்களுடைய கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, அனைவருக்கும் உதவி செய்ய நமக்கு நிறைய பொருளாதாரம் தேவைப்படுகிறது, மற்றபடி எந்த தடையுமில்லை, அதற்குரிய நேரம் வரும்பொழுது முடிவுகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தோம். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் எண்ணங்களை பூர்த்தி செய்வானக.

கூட்டத்தில் அபுதாபி மண்டல செயலாளர்களாக சகோ. அமீருதீன். எஸ்,  சகோ. அன்சாரி. M மற்றும்  செயர் குழு உறுப்பினர்களாக சகோ. லியாகத் அலி, சகோ. அஜ்கர் முஹம்மத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிக முக்கியமாக நம்முடைய உறுப்பினர்கள் கூறிய கருத்துக்களும் அவர்கள் நம்முடைய தேவைகளை சொல்லும்போது பதிலுரைத்த ‘ஆமீன்’ மற்றும் வாக்குறுதிகள் நம்மை மிகவும் ஊக்குவிக்கும் வார்த்தைகளாக இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்.

மற்றும் பல விஷயங்களை விவாதித்து துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. நாம் கேட்டு கொண்டதற்கு இணங்கி, இக்கூட்டத்திற்கு ஷார்ஜா மற்றும்  துபாய் மண்டல உறுப்பினர்கள், முன்னால் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

நிச்சயமாக நம்மூர் மக்களுடன், நம்மூர் செய்திகளுடன் செய்யும் பயணம் என்றுமே மிகவும் அலாதியானதொரு சுகம், மேலும் நாம் அன்று மேற்கொண்ட 250 கி. மி. பயணம் மிகவும் சுவையானதாகவும் மிக்க பயனுள்ளதாகவும் இருந்தது.  அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

முந்தைய மடல்கள்

28-03-2015

04-04-2015

12-04-2015

 

எப்பொழுதும் போல இறுதியாக ஒன்றை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள் மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.
அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

மேலும் நம்மை நோக்கி நோன்பு வெகு வேகமாக வந்துகொண்டிருக்கிறது, நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் ஆயத்தப்படுத்துங்கள். உங்களுடைய சந்தா மற்றும் ஜக்காத் தொகையை தயவு செய்து நமக்கு கொடுத்து நமதூர் மக்களின் கஷ்டத்தை போக்கிடும் நமது கொள்கைகளுக்கு உறுதுணையாய் இருங்கள். அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

நமதூர் JMA தாவூத் அண்ணன் அவர்களுடன் நம்முடைய சந்திப்பு, நடக்க இருக்கின்ற துபாய் மண்டல கூட்டம் மற்றும் புதிய அமான் செய்திகளுடன் அடுத்த வாரம் எழுதும் வாய்ப்பை தந்தருள வல்ல இறைவனை துஆ செய்தவனாக இந்த மட லை நிறைவு செய்கிறேன்.
வஸ்ஸலாம்.

அபுதாபி மண்டல கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு

சமீஹுன் மஜீத். அ
தலைவர், அமான்
+971 50 7653805
amanaym@gmail.com / alsameehun@yahoo.com

(Visited 34 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)