அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு… தலைவரின் மடல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ

DATE: 12/04/2015

அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்.

மீண்டும் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி தந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக, நம்முடைய அமான்

இணையதளம் வழியாக மீண்டும் உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமோடு இருக்க துஆ

செய்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.

கடந்த வாரம் 2/4/2015 அன்று சிறப்பாக ஷார்ஜா மண்டல கூட்டம் நடைபெற்றது. அச்சமயம் நமதூரிலிருந்து பொட்டிக்கார வீட்டு ஜனாப். அன்வர்தீன்

அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நம்முடைய அழைப்பை ஏற்று அமானுடைய ஒருங்கிணைப்பு கூட்டத்திற்க்கு வந்து, மதிப்பு மிக்க

நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

ஜனாப். அன்வர்தீன் அவர்கள் ஆற்றிய சிற்றுரையில், நமது அமானுடைய சேவைகளை நன்கு அறிவதாகவும், அவை சிறப்பாக இருப்பதாகவும்

தெரிவித்தார்கள். மேலும் நம்முடைய சேவைகள் இன்னும் சிறக்க அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

வீடியோ காண http://amanaym.org/events/janab-anwardeen-wishes-aman/

ஆமீன், ஆமீன்… யாராப்பல் ஆலமீன்.

நமக்கும், நமது நிர்வாகிகள் மற்றும் நம்முடன் களப்பணியில் இருக்கும் அனைவருக்கும் அவருடைய சிற்றுரை நம்மை மிகவும் ஊக்குவிக்கும்

வார்த்தைகளாக இருந்தன…. இருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

கூட்டத்தில் ஷார்ஜா மண்டல செயலார்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூட்டத்தில் அமானுக்காக

உருவாக்கப்பட்டுள்ள புதிய அக்கவுண்டிங் சாப்ட்வேர் நிர்வாகிகளுக்கு காட்டப்பட்டது. ஒவ்வொரு உறுப்பினர்களுடைய சந்தா மற்றும் நன்கொடை

எவ்வாறு கணக்கில் வைக்க படுகிறது என்று DEMO காட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் கூட்டத்தில் நமதூர் பழைய பள்ளி வாசல் ஸ்திலமவாதை குறித்து வருத்தமும் ஆதங்கமும், அதனை குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று

தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் எண்ணங்களை பூர்த்தி செய்வானக.

மற்றும் பல விஷயங்களை விவாதித்து துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.

நாம் கேட்டு கொண்டதற்கு இணங்கி, இக்கூட்டத்திற்கு உறுப்பினர்கள், முன்னால் நிர்வாகிகள், அமான் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்,

அனைவருக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் மதிப்பு மிக்க நேரத்தை அமானுக்காக செலவு செய்தமைக்கு அல்லாஹ் அவர்களுக்கு

நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.

மேலும் இறுதியாக ஒன்றை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன், நாம் இதுவரை கொடுத்து வந்த PENSION திட்டத்தின் அடுத்த லிஸ்ட்

நிலுவையில் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய நமக்கு நிறைய பொருளாதாரம் தேவைப்படுகிறது.

மேலும் நமதூரிலிருந்து மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பிற உதவிக்களுக்காக நமது அமானுடைய பெயர் மக்கள்

மனதில் தெரிகிறது. அதனை பூர்த்தி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

நீங்கள் தயவு செய்து நம்மூர் மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, அல்லாஹ்வின் பொருட்டு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள்.
அல்லாஹ் நீங்கள் அளிக்கும் உதவிகளுக்கு, ஈருலகிலும் நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன்.

நடந்து முடிந்த  அபுதாபி மண்டல கூட்டம் மற்றும் புதிய அமான் செய்திகளுடன் அடுத்த வாரம் எழுதும் வாய்ப்பை தந்தருள வல்ல இறைவனை துஆ

செய்தவனாக இந்த மட லை நிறைவு செய்கிறேன்.
வஸ்ஸலாம்

சமீஹுன் மஜீத். அ
தலைவர், அமான்

+971 50 7653805

(Visited 52 times, 1 visits today)

Tags:

Comments (8)

Trackback URL | Comments RSS Feed

 1. Haja Mubarak says:

  மாஷா அல்லாஹ்…
  அமானின் பணிகள் தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் துஆ செய்கின்றேன். மேலும், நமதூர் மக்களுக்கு நற்பணிகள் செய்திட எப்போதுமே அமான் முன்மாதிரி என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அல்லாஹ்வுக்காகவும், மறுமை நாளை அஞ்சியும் ஊதியமின்றி உழைக்கும் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்தி கொள்வானாக…. ஆமீன்

 2. Nizam says:

  அல்லாஹ்வையும் மறுமைநாளையும் மட்டுமே நினைவில் இருத்தி உதவும் நெஞ்சங்கள் அனைவருக்கும் அல்லாஹ் கருணை செய்வானாக! ஆமீன்.!

 3. Nisa_Nishe says:

  Account number Please !!!!

 4. President says:

  Please send your email address to amanaym@gmail.com.
  For AMAN.

 5. Nisa_nishe says:

  Ok done. Thank you very much!!!

 6. Nizam says:

  அமான் பணிகளில் இணைந்து கொள்ள நினைக்கும் இவரது எண்ணங்கள் மூலம் அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்தார்க்கும் இம்மையிலும் மறுமையிலும் கண்ணியத்தையும் பரக்கத்தையும் தருவானாக ஆமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)