பிளஸ் டூவுக்குப் பின் மருத்துவப் படிப்புகள்

கீதா
பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் தவிர, மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகளைப் படிக்கலாம்.பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களின் கனவு, டாக்டராக வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் குறைவு என்பதால் பிளஸ் டூ தேர்வில் மிக மிக அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. உயிரியல் படிப்புகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் தொடர்பான பல்வேறு படிப்புகள் உள்ளன. அதுபற்றிய அறிமுகம் இதோ…
எம்.பி.பி.எஸ்.

டாக்டர் பணி என்பது நல்ல வருவாய் தரக்கூடிய, பொது மக்களின் மரியாதைக்குரிய முக்கியப் பணி. டாக்டராக வேண்டுமானால் எம்பிபிஎஸ் படிக்க வேண்டும். இது, ஐந்தரை ஆண்டு படிப்பு. தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு இல்லை. தற்போது இந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு (NEET) நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பொது நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும்கூட, தற்போது நுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வரும் தமிழகத்தில், அதே நிலை இந்த ஆண்டும் தொடருமா என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாணவர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். எனினும், ஆந்திரம், காஷ்மீர் நீங்கலாக மற்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்களில் சேர விரும்பும் தமிழக மாணவர்கள் இந்தப் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதேபோல புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுத வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் படித்து முடித்த மாணவர்கள், மருத்துவப் பயிற்சிக்குப் பிறகு இந்திய மருத்துவக் கவுன்சலில் தங்களை டாக்டர்களாகப் பதிவு செய்த பிறகே டாக்டராக பணி புரிய முடியும். எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு அரசு பணியில் சேர விரும்புபவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு எழுதி அந்த வாய்ப்பைப் பெறலாம். மத்திய அரசு பணிக்குச் செல்ல விரும்பினால், அதற்காக மத்திய அரசு தேர்வாணையம் சிறப்புத் தேர்வை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் பாதுகாப்பு, ரயில்வே துறைகளில் டாக்டராக பணியாற்ற முடியும். மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உயர்ந்த மதிப்பீடு உள்ள பொறியியல் கல்லூரிகள்

பி.டி.எஸ்.

பல் மருத்துவத்துக்கான இளநிலைப் பட்டப் படிப்பு இது. மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டும். பல் மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாது, முகச் சீரமைப்பு, பல்லை அழகுபடுத்துதல் போன்றவை முக்கியத்துவம் பெற்று வருவதால் பல் மருத்துவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் பல இருக்கின்றன. அரசு ஒதுக்கீட்டின்கீழ் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கு அடுத்தபடியாக பிடிஎஸ் படிப்யை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். பிடிஎஸ் படித்து முடித்து பல் மருத்துவ கவுன்சலில் பல் மருத்துவராகப் பதிவு செய்த பிறகு பல் மருத்துவராகப் பணி புரியலாம். அனைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் பல் சிகிச்சைக்கென்றே தனியாக பிரத்யேகப் பிரிவு செயல்படுவதால் அங்கேயும் வேலை வாய்ப்பு கிடைக்கும். பல் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்களில் வேலை வாய்ப்பு உள்ளது. பேரா டென்டல், டென்டல் மெட்டீரியல் அண்டு ஓரல் ஹைஜீன், டென்டல் டெக்னீஷியன் போன்ற டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்கள் சேரலாம்.
பி.எஸ்சி. நர்சிங்

பொறுமை, அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் கூடிய பணி இது. பிஎஸ்சி நர்சிங் படிப்பைக் கற்றுத் தர ஏராளமான கல்வி நிலையங்கள் உள்ளன. இது நான்கு ஆண்டு கால பட்டப் படிப்பு. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். நர்சிங் டிப்ளமோ படிப்பிலும் மாணவிகள் சேரலாம். டிப்ளமோ படித்த மாணவிகள், மருத்துவமனைகளில் நர்சாக பணிபுரிந்து அனுபவம் பெற்ற பிறகு, பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. படிப்பை முடித்து மாநிலத்தில் உள்ள நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
அரசு வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையிலேயே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் நர்சு பணிகளுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அரபு நாடுகளில் இந்திய நர்சுகளுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நர்சிங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படிக்கலாம்.
பார்மஸி

டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதியிருப்பதைப் பார்த்து மருந்துகளைத் தருவதற்கான உரிமை உடையவர்கள் பார்மசிஸ்ட்டுகள் எனப்படும் மருந்தாளுநர்கள் மட்டுமே. பார்மசிஸ்ட்டுகளாக டி.பார்ம், பி.பார்ம் படிப்புகளைப் படிக்கலாம். மதுரை, தஞ்சாவூர், கோவை மருத்துவக் கல்லூரிகளில் டி.பார்ம், படிப்பு உள்ளது. பி.பார்ம்., படிக்க தமிழகத்தில் பல பார்மஸி கல்லூரிகள் இருக்கின்றன. பி.பார்ம். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களுக்கு கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மருந்தின் தன்மையை தெரிந்து வைத்திருப்பதுடன், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நோயாளிக்கு வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பார்மஸி படித்தவர்கள், இந்திய மருந்து கவுன்சிலின் மாநில கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் தோராயமாக 50 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. சொந்தமாக மருந்துக் கடைகளை வைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்மஸி படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அங்கும் பார்மஸி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு பார்மஸி பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பார்ம்.டி என்ற புதிய படிப்பு சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அண்மைக் காலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.
பிசியோதெரபி (பி.பி.டி.)

மிக முக்கியமான துணை மருத்துவப் படிப்பு இது. நீண்ட நாட்களாக முறையாக செயல்படாமல் இருக்கும் உடல் இயக்கத்தை சீர் செய்ய மருந்துகளோடு சேர்த்து முடநீக்கியல் சிகிச்சையும் அவசியமான ஒன்றாகி உள்ளது. எலும்பு முறிவு, சதைப் பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளித்து வலியைப் போக்குவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய பணிக்கேற்றவர்களைத் தயார் செய்வதற்காக உள்ள படிப்புதான் பிபிடி பட்டப் படிப்பு. இப்படிப்புக்காலம் நான்கரை ஆண்டுகள். வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவின் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு பிசியோதெரபிஸ்ட்டுகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். டாக்டர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் பிசியோதெரபிஸ்ட்டுகளுக்கும் வேலை வாய்ப்பு உள்ளது.
ஆக்குபேஷனல் தெரபி

மனநலம் மற்றும் மனநலம் சார்ந்த உடல் கோளாறுகளுக்கானது ஆக்குபேஷனல் தெரபி. இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட  நடத்தைக்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுதான் இந்தப் படிப்பு. இந்தப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பாலிகிளினிக், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிப் பள்ளிகள், மனநல சிகிச்சை மையங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் வேலை வாய்ப்பு உள்ளது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவப் படிப்புகள்

நவீன மருத்துவத்திற்கு இணையாக சமீப காலங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் தேவை அதிகரித்து உள்ளது. சமீபத்திய உதாரணம் டெங்கு சிகிச்சை. கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பப்பாளி இலைச் சாறு, நிலவேம்புக் கஷாயம் போன்ற பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்திய பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
தமிழகத்தில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை சித்த மருத்துவப் பட்டப் படிப்பு உள்ளது. பி.ஏ.எம்.எஸ். என்ற 5 ஆண்டு ஆயுர்வேத மருத்துவ படிப்பு சித்த மருத்துவக் கல்லூரியிலேயே உள்ளது. இதுதவிர ஆயுர்வேத மருத்துவத்திற்கென்றே தனியார் ஆயுர்வேத பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆயுர்வேதா கல்வி நிலையத்தில் டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் பார்மஸி என்ற 2 ஆண்டு படிப்பு, டிப்ளமோ இன் ஆயுர்வேதா நர்ஸிங் என்ற 18 மாதப் படிப்பும்  உள்ளன. ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் ஹெர்பல் மெடிசின் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பு உள்ளது. நவீன மருத்துவத்திற்கு அடுத்து, பிரபலமாக இருப்பது ஹோமியோபதி. ஐந்தரை ஆண்டு படிப்பு இது. எளிய மருத்துவ சிகிச்சை என்பதால், இந்த மருத்துவ முறை தற்போது பிரபலமாகி வருகிறது. எனவே, இந்தப் படிப்பில் சேருவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மதுரையை அடுத்த திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி உள்ளது. இதுதவிர, தனியார் ஹோமியோபதி கல்லூரிகளும் உள்ளன.
ஆடியாலஜி

பி.ஏ.எஸ்.எல்.பி. என்பது ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் அண்ட் லாங்க்வேஜ் பேத்தாலஜியில் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு. பேச்சு மற்றும் செவித்திறன் கோளாறுகளைக் கண்டறிவது தொடர்பான மருத்துவப் படிப்பு. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், விநாயகா மிஷன் பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பு உள்ளது. சண்டீகரில் உள்ள போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் பிஎஸ்சி ஆடியாலஜி படிப்பு உள்ளது. காது கேட்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஆப்ட்டோமெட்ரி

கண்களின் அமைப்பு, செயல்பாடுகளைப் பற்றிய படிப்பு இது. கண் மருத்துவமனைகளில் கண் டாக்டர்களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும். ரிப்ராக்டிவ் எரர் என்று சொல்லப்படும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து ரிசல்ட் தருபவர்கள் இவர்கள். அரசு கண் மருத்துவமனைகள் தவிர, அகர்வால் கண் மருத்துவமனையில் பி.எஸ்சி. 4 ஆண்டு படிப்பும் டிப்ளமோ 2 ஆண்டு படிப்பும் உள்ளன. தலா 40 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத  மதிப்பெண்கள்  பெற்றிருக்க வேண்டும். அறிவியலை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, ரிப்ராக்ஷன், ஆப்தால்மிக் நர்சிங் அசிஸ்டெண்ட்  ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி என்ற 3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சான்றிதழ்களை வழங்கும்.
ரேடியோகிராபி

மருத்துவத்தின் உட்பிரிவான இந்தப் படிப்பு படித்தவர்களை ரேடியாலஜிஸ்ட் என்று கூறுவார்கள். எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் செய்வது இவர்கள்தான். உடல் உள் உறுப்புகள் எப்படி உள்ளன, என்ன மாதிரியான கோளாறுகள் உள்ளன, அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது போன்றவற்றை துல்லியமாக அறிந்து, ரிப்போர்ட் செய்வது தொடர்பான படிப்பு இது. அதனால், டாக்டர்கள் படிக்கும் உடற்கூறியல் பாடம்போல இவர்களுக்கும் உடல் உறுப்புகள் குறித்து முழுவதும் கற்றுத் தரப்படுகிறன.  நவீன மருத்துவத்தின் தலைநகரமாக இந்தியா இருப்பதால், சர்வதேசத் தரம் வாய்ந்த பரிசோதனைக் கூடங்கள் இங்கும் வந்துவிட்டன. எனவே, இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.
ஸ்பீச் தெரபி

பேசுவதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வது குறித்து இந்தப் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் உட்பட பல தன்னாட்சி பெற்ற மருத்துவமனைகளில் ஸ்பீச் தெரபி பாடத்தில் இளநிலைப் பட்டப் படிப்பு உள்ளது. தவிர, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பி.ஏ.எஸ்.எல்.பி. என்ற நான்காண்டுகள் பட்டப் படிப்பு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள்

மருத்துவக் கல்வி இயக்ககத்தின்கீழ் கிண்டியில் செயல்பட்டு வரும் கிங் இன்ஸ்டிட்யூட்டில் 23 படிப்புகள் உள்ளன.
அதன் விவரம்:  
1.    கார்டியோ சோதனோகிராபி தொழில்நுட்பம்     1 ஆண்டு

2.    ஈ.சி.ஜி. டிரட்மில் தொழில்நுட்பம்     1 ஆண்டு

3.    பம்ப் தொழில்நுட்பம்    1 ஆண்டு

4.    கார்டியோ கேத் தொழில்நுட்பம்    1 ஆண்டு

5.    அவசரகாலத் தொழில்நுட்பம்    1 ஆண்டு

6.    சுவாசத் தொழில்நுட்பம்    1 ஆண்டு

7.    டயாலிசஸ் தொழில்நுட்பம்    1 ஆண்டு

8.    மயக்க மருந்தியல் தொழில்நுட்பம்    1 ஆண்டு

9.    தியேட்டர் தொழில்நுட்பம்    1 ஆண்டு

10.   ஆர்த்தோபிடிக் தொழில்நட்பம்         1 வருடம்

11.   கதிரியக்க உதவியாளர்     1 ஆண்டு

12.   ஆடியோமெட்ரி    1 ஆண்டு

13.   செவித்திறன் மற்றும் பேச்சு தெரபி    1 ஆண்டு

14.   உணவு மேலாண்மை     1 ஆண்டு

15.    ஈ.ஈ.ஜி., ஈ.எம்.ஜி.     1 ஆண்டு

16.    செவிலியர் உதவியாளர் –     1 ஆண்டு

17.    டென்டல் மெக்கானிக்     2 ஆண்டுகள்

18.    பல் சுகாதாரம்     2 ஆண்டுகள்

19.    மெடிக்கல் ரெக்கார்டு    6 மாதங்கள்

20.    மெடிக்கல் லேபாரட்டரி     2 ஆண்டுகள்

21.    கதிரியக்க தொழில்நுட்பம்    2 ஆண்டுகள்

22.    மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்     -1 ஆண்டு

23.    ஆப்டோமெட்ரி    6 மாதங்கள்

(Visited 3,539 times, 4 visits today)

Tags:

Comments (10)

Trackback URL | Comments RSS Feed

 1. MOHAMMED says:

  எனது மனைவி 12th கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார் தற்போது ஹோமி யோபதி படிக்க வாய்ப்புள்ளதா?

 2. Hemath says:

  மருந்தியல் கல்வி வேலை வாய்ப்பு கிடைக்குமா?

 3. Hey!Ich frage mich zurzeit, welche Korsage für mich
  in Frage kommt.Ich habe wirklich einiges an diverse Unterwäsche ausprobiert, allerdings
  möchte ich mich in die aufregende Welt der Corsagen trauen.Könnt
  ihr mir sagen, was ich nun zu berücksichtigen habe?Zu meinem Bedauern ist es ganicht so leicht,
  eine passende Korsage zu entdecken.Die Korsage sollte gut verabeitet sein & natürlich auch den Busen in den Vordergrund rücken.Für Support
  wäre ich wirklich dankbar. Mit freundlichem Gruß Vanessa https://ekihoxop.wordpress.com/2015/12/16/nageldesign-historie-evolution-der-modeerscheinung/

 4. “(To date) we have saved about 300,000 k – Wh,” said, Dr.
  A travel agent who specializes in Disney Destinations will know what discounts are available and
  will help you take advantage of the best deal for your family.

  This array is approximately 10 feet above ground at the lowest point.

 5. I pay a quick visit everyday a few websites and information sites to read articles,
  however this weblog presents feature based content.

 6. Good information. Lucky me I ran across your blog by chance (stumbleupon).
  I’ve book-marked it for later!

 7. sex toys says:

  Admiring the dedication you put into your site and detailed information you
  provide. It’s awesome to come across a blog every once in a while that isn’t the same old
  rehashed material. Excellent read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google
  account.

 8. raji says:

  I have completed 12 th std.in bio science.I want to study in medical course.diploma in (any)course.my cut off mark 129.25..I apply in paramedical courses.and diploma in pharmacy.please give any information for me.i am waiting for your information Sir….

 9. Hi there, after reading this remarkable paragraph i am as well delighted to
  share my experience here with mates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)