ஆங்கிலம் கற்பிக்கும் பிரிட்டிஷ் கவுன்சில்!

கல்வி, விளையாட்டு, அறிவியல், கலை, கலாசாரம் என பல்வேறு துறைகளில் உலக நாடுகளுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சில், இந்தியாவின் முக்கிய பெருநகரங்களிலும் செயல்படுகிறது.

சென்னை மையத்தில், கடந்த 2009ம் ஆண்டுமுதல் ஆங்கில மொழித்திறன் சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் பிரிட்டிஷ் கவுன்சில், நவீன வசதிகளைக் கொண்ட புதிய வகுப்பறைகளை இதற்காகவே தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது!

இளம் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான புதுமையான பாடத்திட்டம், கல்வி உபகரணங்கள் மற்றும் செயல்வழி பயிற்சி முறையில் ஆங்கில மொழி பேசும் திறனை மேம்படுத்துவதுடன், பொது அறிவு மற்றும் வாழ்க்கை திறன்களையும் மேம்படுத்தவும் இளம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேலும், 8 முதல் 15 வயது உள்ள மாணவர்களுக்கு, 3 வாரங்களுக்கு, கோடை கால சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் தேவைக்கேட்ப பல்வேறு ஆங்கிலப் பயிற்சிகளை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்குகிறது.

இளைஞர்களுக்கான பயிற்சி: வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு, ஆங்கில மொழியில் தங்களது திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுவதற்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பணிபுரிபவர்களுக்கான பயிற்சி: பணி நிலைகளில் அவசியம் தேவைப்படும் மென்திறன்களில் ஒன்றான சிறந்த தகவல்தொடர்பை வளர்த்துக் கொள்வதற்தான பயிற்சி.

கார்ப்ரேட் தொடர்பு பயிற்சி: இன்றைய உலகமயமாக்கல் மற்றும் சர்வதேச வணிகத்தில், பணியாளர்கள் சரியான ஆங்கில தகவல் தொடர்பை பெறும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி: ஆங்கில மொழி கற்பிக்கும் வகையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் பிரத்யேக தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

சர்வதேச தேர்வுகளுக்கான பயிற்சி: வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில மொழி புலமைத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் அவசியம். இது போன்ற சர்வதேச தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் பிரத்யேக பயிற்சியை வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.britishcouncil.in

(Visited 41 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)