தமிழ் வழி ஆங்கிலம் கற்போம் -2

நமது முதல் பாடம் ஒரு எளிதான, ஆனால், மிகவும் முக்கியமான விதியை விளக்குகிறது. “நான் ஒரு மாணவன்” என்கிற ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம். இதனை ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் “I a student” என்று வருமல்லவா? ஆனால், ஆங்கில இலக்கணப்படி, “I am a student” என்றுதான் எழுத வேண்டும். எனவே, இந்த am தவிற இதற is மற்றும் are எங்கே உபயோகிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கீழேயுள்ள அட்டவணைகள் உங்களுக்கு இதனைத் தெளிவாக்கும்.

Positive | நேர்மறை
Example
I am I am a student.
நான் ஒரு மாணவன்.
He is He is a student.
அவன் ஒரு மாணவன்.
She is She is a student.
அவள் ஒரு மாணவி.
It is It is a student.
அது ஒரு மாணவன் .
We are We are students.
நாம் (நாங்கள்) மாணவர்கள்.
You are You are students.
நீங்கள் மாணவர்கள்.
They are They are students.
அவர்கள் மாணவர்கள்.
Negative | எதிர்மறை
Example
I am not I am not a student.
நான் ஒரு மாணவன் இல்லை.
He is not He is not a student.
அவன் ஒரு மாணவன் இல்லை.
She is not She is not a student.
அவள் ஒரு மாணவி இல்லை.
It is not It is not a student.
அது ஒரு மாணவன் இல்லை.
We are not We are not students.
நாம் (நாங்கள்) மாணவர்கள் இல்லை.
You are not You are not students.
நீங்கள் மாணவர்கள் இல்லை.
They are not They are not students.
அவர்கள் மாணவர்கள் இல்லை.

தமிழில், எழுவாய்க்கேற்ப, “மாணவன்” என்ற சொல் “மாணவி”, “மாணவர்கள்” என்றெல்லாம் மாறுவது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஆங்கிலத்தில், இந்தக் குழப்பமே இல்லை. “Student” என்ற சொல் எல்லா வாக்கியங்களிலுமே மாறாமல் அப்படியே இருக்கிறது; மாறுவது am, is அல்லது are மட்டுமே. இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

I am 15 years old. My sister is 12. எனக்கு 15 வயது. என் தங்கைக்கு 12 வயது.

Raman is afraid of snake. ராமனுக்குப் பாம்பென்றால் பயம்.

It is nine O’clock. இப்போது நேரம் 9 மணி.

My brother is very tall. Heis a soldier. என் அண்ணன் மிக உயரமானவன். அவன் ஒரு படைவீரன்.

Balan and I are good friends. பாலனும், நானும் நல்ல நண்பர்கள்.

Your books are on the table. உன் புத்தகங்கள் மேஜையில் இருக்கின்றன.

(Visited 182 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)