வேலை தேடுபவர்களுக்கு சில அறிவுரைகள்

இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான். ஏனெனில், அந்த காலகட்டத்தில் வேலைகள் ஏராளமாக இருந்தன மற்றும் அதற்கான தகுதியான நபர்கள் மிகவும் குறைவு என்பது இவர்களின் எண்ணம். அந்த காலகட்டத்தில், வேலையைப் பெறுவதற்கான போட்டி, ஒரு நடைப் பயிற்சி போட்டியைப் போல்தான் இருந்தது.

அதற்கு பிறகான நாட்களில், அந்த போட்டி ஒரு ஓட்டப் பந்தயமாக உருவெடுத்தது. ஆனால், அது இன்று, தடைகளைத் தாண்டி ஓடக்கூடிய ஒரு கடினமான போட்டியாக பரிணாமம் அடைந்துள்ளது. மேலும், அன்றைய நாட்களில், பணிகளைத் தேடுவதென்பது, ஒருவரின் சொந்த மாவட்டம், மாநிலம் அல்லது அதிகபட்சமாக ஒரு நாட்டின் எல்லை என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்றைய தாராளமய பொருளாதார நிலை வேறு. உலகம் முழுவதும் வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகியுள்ளன. தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கான உலகம் திறந்துவிடப்பட்டுள்ளது.

வேலை தேடும் செயல்பாட்டில் வெற்றியடைவதற்கான சில தாரக மந்திரங்கள்

உங்களின் கல்லூரி Placement cell மற்றும் Alumni associations

உங்கள் கல்லூரியின் placement cell -ஐ எந்த சமயத்திலும் இளக்காரமாக நினைத்துவிட வேண்டாம். அதேசமயத்தில், அவர்களே உங்களுக்கு, உங்களின் பெற்றோர் செய்வதுபோன்று பார்த்து பார்த்து செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. ஏனெனில், உங்களைப் போன்று அவர்கள் பல பேருக்கு உதவ வேண்டும். Placement cell -ன் அலுவலர்களை சந்தித்து, வேலைவாய்ப்புகள் பற்றி கேட்டறிந்து, உங்களின் விருப்பம் மற்றும் பணி தேர்வு குறித்து பேச வேண்டும்.

பல கல்லூரிகளில், பழைய மாணவர் சங்கம், நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும். சில புகழ்மிக்க கல்லூரிகளில், பழைய மாணவர் சங்கங்கள், வெள்ளி விழா, பொன் விழா மற்றும் வைர விழா போன்றவையும் கொண்டாடுவதுண்டு. அதுபோன்ற கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும், பல மாணவர்களை, அவர்களின் alma mater -இலிருந்து எடுத்துக்கொள்கின்றன. அதேசமயம், ஒரு கல்லூரியில் தேர்ச்சி பெற்று வெளியே சென்ற பிறகுதான், ஒருவர் பழைய மாணவராக ஆக முடியும் என்பதை மறக்கக்கூடாது.

நீங்கள், பழைய மாணவர் சங்கத்திடம், பழைய மாணவர் பற்றிய பட்டியல் கேட்டு, அவர்களிடம் தொடர்பு கொள்ள முயலலாம். இதன்மூலம், உங்களின் ஆர்வத்தை அவர்கள் புரிந்துகொண்டு, அதனால் ஈர்க்கப்பட்டு, உங்களுக்கு உதவ நினைக்கலாம். ஆனால், placement cell மற்றும் alumni association ஆகிய இரண்டு அம்சங்கள் மட்டுமே, உங்களுக்கான வேலை வாயப்புகளை 100% உறுதிசெய்துவிடும் என்று நினைக்கக்கூடாது. உங்களின் ஆற்றல், திறமை மற்றும் நடைமுறை அறிவு போன்றவையே, இறுதி முடிவுகளைத் தரும் ஆற்றல் பெற்றவை என்பதை மறத்தலாகாது.

தொழில் நிபுணர்களின் சங்கம்

உங்களின் தொழில்துறை என்னவாக இருந்தாலும், அவற்றுக்கான தனி சங்கங்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியாளர் என்று வைத்துக் கொண்டால், பொறியாளர் சங்கம் உண்டு. இதுதவிர, computer society of India, society of automotive engineers, institute of electrical & electronics engineers, institute of electronics & telecommunication engineers போன்ற பல்வகையான தொழில்துறை சங்கங்கள் உண்டு. மேலாண்மை படிப்பை எடுத்துக்கொண்டால், அகில இந்திய மேலாண்மை சங்கம் மற்றும் பல உள்ளூர் சங்கங்களும் உண்டு. ஆசிரியர் தொழிலை எடுத்துக்கொண்டால், Indian society for technical education என்ற அமைப்பும், பயிற்சியளிக்கும் தொழில் துறைக்கும் Indian society for training and development என்ற அமைப்பும் உண்டு. மேலும், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் மற்றும் நிதி துறைகளுக்கென்று தனியான அமைப்புகளும் உண்டு. இத்தகைய அனைத்து சங்கங்களும், தங்கள் துறை சார்ந்த செமினார்கள், வொர்க்ஷாப், மாநாடுகள் ஆகியவற்றை தங்களுக்கு பொருத்தமான ஏதேனும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் நடத்துகின்றன. மேலும், குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறை கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.

எனவே, இதுபோன்ற அமைப்புகளில் உறுப்பினராகி, பொதுவாக மாதந்தோறும் ஏற்பாடு செய்யப்படும் லெக்சர் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது நன்மை பயக்கும். உங்களின் துறையில் அனுபவமிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களை சந்தித்து உரையாடுகையில், அவர்களிடமிருந்து, எந்தளவு விஷயங்களை வாங்க முடியுமோ, அந்தளவிற்கு வாங்கிவிட வேண்டும். மேலும், இந்த அமைப்புகளின் மூலமாக, பல நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களின், ஏன், அந்த நிறுவன முதலாளியின் அறிமுகம்கூட கிடைக்கும்.

உங்கள் இருபது வயதுகளின் இறுதி கட்டத்தில் அல்லது முப்பது வயதுகளின் முதல் கட்டத்தில், ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து, உங்களின் திறமையை நிரூபிக்கலாம். விண்ணப்பித்தல் மற்றும் நேரடியாக தொடர்பு கொள்ளல் வேலை பெறுதல் தொடர்பாக இருவிதமான செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். வாய் மொழியின் மூலமாக, நிறுவனங்கள் பற்றியும், காலகிரமமாக, அவற்றில் நிரப்பப்படும் பணியிடங்கள் பற்றியும் அறியலாம். இன்னொரு வகை என்னவெனில்,

நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பது.

இதுபோன்று விண்ணப்பித்து அவற்றுக்கு நீங்கள் பதிலை பெற்றுவிட்டால், உங்களுக்கு வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம்.

எலக்ட்ரானிக் மீடியாவின் பயன்பாடு

இன்றைய உலகில், பணி தேடும் செயல்பாட்டில், எலக்ட்ரானிக் மீடியாக்களின் பங்கு அதிகம். குறைந்தபட்சம் உங்களிடம் ஒரு E-Mail கூட இல்லையெனில், வேலைக்கான போட்டியில் நீங்கள் வெற்றி பெறுவது கடினம். அந்த வசதியைக்கூட பெறாதவரை, நிறுவனங்கள் ஒரு பொருட்டாக மதிக்காது.

ஒருவர் எந்த துறையாக இருந்தாலும், குறைந்தபட்ச கணிப்பொறி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியை ஆன் செய்து இயக்குவது எப்படி, word போன்ற சில அடிப்படை டாகுமென்டுகளை திறப்பது எப்படி, இன்டர்நெட்டில் தேடுவது எப்படி உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் கற்றுக்கொள்வது மிகவும் எளிமையான மற்றும் செலவில்லாத விஷயம் என்பதையும் நினைவில் கொள்க.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரம், இணையத்தில் வேலை தேடுவதற்கு செலவழித்தல் வேண்டும். இணையத்தின் மூலம் பல்வேறான நிறுவனங்களின் விபரங்கள் மற்றும் அவற்றில் காலியாக உள்ள பணி விபரங்கள் ஆகியவற்றை அறியலாம். மேலும், உங்களின் சிறப்பு படிப்புக்கேற்ற சிறந்த வலைதளங்களைப் பற்றிய தகவல்களை நிபுணர்களிடமிருந்து கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், பணி தேடுதலில் கன்சல்டன்டுகளில் உதவியை நாடுகையில், சில புகழ்பெற்ற கன்சல்டன்டுகள், அதற்கான கட்டணத்தையும் வசூலிக்கலாம்.

அதேசமயம், கட்டணத்திற்காக யோசிக்காமல், உங்களின் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற சிறப்பான பணி வாய்ப்புகளை, அதுபோன்ற புகழ்பெற்ற கன்சல்டன்சிகள் ஏற்பாடு செய்து கொடுத்தால், நீங்கள் அவற்றின் உதவியைப் பெறுவதே சிறந்தது. உங்களின் வட்டத்தை பெரிதாக்குக… ஒன்றை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 60%க்கும் மேற்பட்ட பணிகள், விளம்பரங்கள் மூலமோ அல்லது கன்சல்டன்சிகள் மூலமாகவோ நிரப்பப்படுவதில்லை. வெறும் வாய்மொழியின் மூலமாக, தற்போது தங்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மூலமாகவே ஏராளமான பணியிடங்கள் நிரம்புகின்றன.

மேலும் விபரங்களுக்கு கல்வி களஞ்சியம்

(Visited 245 times, 1 visits today)

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)