இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெறுவதற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழகம் அழைப்பு

சுயநிதி, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் À. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுயநிதி, அரசு உதவி பெறும் கலை – அறிவியல் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து பயன் பெறும் வகையில் இலவசக் கல்வித் திட்டத்தை 2010-11ஆம் கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டு சேர்க்கைக்கான மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற, விவசாயக் கூலி தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

 

 

(Visited 30 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)