அடுத்து என்ன படிக்கலாம்?

+2 முடிந்தது, அடுத்து என்ன படிக்கலாம்?

இதுதான் அனைவர்களின் மனதில் எழும் கேள்வி. பிள்ளைகளை என்ன படிக்க வைக்கலாம்? என்ன படித்தால் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்? இது பெற்றோர்களின் மனதில் எழும் கேள்வி. இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனனில் இன்டெர்நெட் இருக்கிறது. தேடல்கள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது.”உலகம் சுருங்கி விட்டது” என்று இதை வைத்துதான் சொன்னார்களோ? ஆனால் எத்தனை பேர்கள் இதனை சரியாக பயன்படுத்துகிறார்கள்? அவர்களுக்குத்தான் இந்த சிறிய கட்டுரை.

இவர்களுக்கு முதலில் ஏற்படும் குழப்பம் நாம் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்பதில்தான்? அடுத்து என்ன படிக்கலாம்? நமது கல்வி அமைப்பே மதிப்பெண் சார்ந்து இருப்பதால் மதிப்பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது.அதே சமயம் நமது ஆர்வம் எதை நோக்கி நம்மை செலுத்துகிறது என்பதை உற்றுநோக்குவதில் சிலர் கோட்டை விட்டு விடுகிறார்கள். அதிலும் நம் பிள்ளைகளின் விருப்பம் என்ன என்று பார்ப்பதில் அதிக பெற்றோர்கள் கவனம் செலுத்துவதில்லை என்றே சொல்லலாம். இதனால் மனம் உடைந்த பிள்ளை வீட்டை விட்டு ஓடிய கதையை நாம் கேட்டிருப்போம். இது ஒருபுறம் இருக்க

என் நண்பன் இதை படிக்கிறான் அதனால் நானும் இதனை எடுத்தேன் என்று சொல்பவர்களும் உண்டு. சில பல படிப்புகள் பற்றி மட்டும் சிலரால் பெரிதும் பேசப்படுவது உண்டு. இதனை வைத்து தேர்வு செய்பவர்களும் உண்டு. பெற்றோர்களின் கனவை நினைவாக்குது என்ற எண்ணத்தில் செயல்படுவதாக நினைத்து கடைசியில் ஏமாற்றம் அடைவது, அல்லது நம்முடைய திறன் எத்தனை? என்பதை கவனத்தில் வைக்காமல் இருப்பது, இவைகளை கவனத்தில் கொள்ளாமல் படிப்பை தொடர முற்படும் போது அவர்கள் நினைத்த உயரத்திற்கு போக முடியாத சூழ்நிலைகள் ஏற்படுகிறது.

இவர்கள் அனைவருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றுதான். படிப்புக்கு மதிப்பெண் அவசியம்தான். ஆனால் அதனையும் விட நமது ஆர்வம், விருப்பம் நம்மை எதை நோக்கி இழுக்கிறதோ அதனை நோக்கித்தான் செல்ல வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெளிவாக திறந்த மனதோடு ஆராய்வதில் தப்பில்லை. கவுன்சிலிங் பற்றித்தான் குறிப்பிடுகிறேன்.

அடுத்து என்ன படிக்கலாம்? தொடர்ச்சி

துறைகள் என்று எடுத்துக்கொண்டால் அறிவியல் சார்ந்த,பொறியியல் சார்ந்த, அல்லது வணிகவியல் சார்ந்த படிப்புகள் நிறைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட தொழிலை சார்ந்த படிப்புகளும் இருக்கிறது.உதாரணத்திற்கு CA, CS, ஜர்னலிஸம் போன்றவை. விரிவாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Medicine

Medicine

Engineering

Engineering

Designing

Designing

 

 

 

 

 

 

Commerce

Commerce

 

 

 

 

 

 

(Visited 698 times, 1 visits today)

Tags: ,

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Syed Mohd says:

    சரியான நேரத்தில் சரியான தகவல்.மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)