பேஸ்புக்கும்… பெண்களும் … (பாகம்-1)

Filed in கணினிப் பகுதி by on August 10, 2013 0 Comments

Facebook help to FBIஇந்த தொடர் பேஸ்புக்கில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், பாதுகாப்பாக இருக்க அவர்கள் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் , உங்களோடு பேச இருக்கிறது… (அட ஆண்களுக்கு இந்த தொடர் யூஸ் ஆகாதாப்பா என்று கண் சிவக்க கடுப்பாகும் என் இனங்கள் உங்களுக்கு தெரிந்த , தோழிகள் உறவுக்கார பெண்களுக்கு இந்த டிப்ஸ் களை கொடுக்க இதை படித்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது நீங்களும் பேஸ்புக்கில் பாதுகாப்பை (Privacy ,Security and Safety) விரும்பினால் இந்த டிப்ஸ்களை பிரயோகிக்கலாம் )

பேஸ்புக் பாதுகாப்பானதா?? :
ஆர்குட், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் என்று நிறைய சமூக வலைத்தளங்கள் (Social Networking) இணைய உலகில் இருக்கின்றன ,ஆனால் சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன் னாக இருப்பது பேஸ்புக் தான், அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கோடிகளில் இருக்கிறது,அது மட்டுமின்றி அந்த எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து கொண்டே இருக்கிறது., இத்தனை பேர் இருக்கிற காரணத்தினாலோ என்னவோ பேஸ்புக் குடன் இலவச இணைப்பாக பிரச்சனைகள் ,ஹேக்கர்கள் தொந்தரவு, வைரஸ் மற்றும் மால்வேர்களும் தாராளமாக கிடைக்கின்றன…
அதெல்லாம் சரி பேஸ்புக் பாதுகாப்பானதா இல்லையா என்று ஒற்றை வரியில் சொல்லப்பா என்கிறீர்களா??
பேஸ்புக்கை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தினால் அது பாதுகாப்பனதே !
(Visited 29 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)