செய்திகள்

அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments
அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்  பாடமாக கற்பிக்க வேண்டும்

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் […]

Continue Reading »

பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments
பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

விரைவில் பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி செய்து தரப்படும் என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் சோதனை முயற்சியாக எம்.ஜி.சாலையில் வைஃபை தொழில்நுட்ப வசதி தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் சில தொழில்நுட்ப கோளாறால் அதனை தொடந்து வழங்க முடியாமல் போகிறது. எனவே விரைவில் தொழில்நுட்ப பிரச்னைகளை களைந்து, சீர்செய்யப்பட்டு பெங்களூரு முழுவதும் இலவச […]

Continue Reading »

நெல்சன் மண்டேலா 1918-2013

Filed in செய்திகள் by on December 8, 2013 0 Comments
நெல்சன் மண்டேலா 1918-2013

நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.அவருக்கு வயது 95.மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

Continue Reading »

நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்

Filed in செய்திகள் by on July 30, 2013 0 Comments
நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்

சென்னை நகர வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்கள் பயண பேரத்தில் கொடுக்கும் தொல்லையும், பயணிகள் நொந்து போவதும், அதனால் விளையும் ஏச்சும் பேச்சும் சென்னையில் வாடிக்கையாக நாம் அனுபவித்த நிகழ்வுகளில் ஒன்று. இனி இது போல் நாம் பேசவும் தேவையில்லாமல் ஏசவும் தேவை இல்லை. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டு, மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது “நம்ம ஆட்டோ” (சென்னையின் கெளரவம்) – என்ற பெயருடைய மூன்று சக்கர […]

Continue Reading »

பண‘மெயில்!

Filed in செய்திகள் by on July 28, 2013 0 Comments

கூகுள் கண்டுபிடிப்புகளுக்கும் அதன் சேவைகளுக்கும் என்றுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஜிமெயில் சேவையின் வலை என்பது மிகப் பெரிது. ஜிமெயில் மூலம் படங்கள் அனுப்புவது, பத்திரங்கள் , ஃபைல்ஸ் அனுப்புவது, நண்பர்களோடு சாட்டிங் செய்வது என இதன் பயன்பாடுகள் நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் தற்போது ஒரு சேவையும் இணைந்துள்ளது. அதுதான் ஜிமெயில் மூலம் பணம் அனுப்பும் சேவை. இனி மயிலாப்பூரில் இருக்கும் தந்தைக்கு மலேசியாவில் இருக்கும் மகனிடமிருந்து இன்னும் பணம் வரவில்லையே என்றோ […]

Continue Reading »

ரம்ஜான் நோன்பு: ஷார்ஜாவில் 2,000 பேர் பங்கேற்ற ‘கின்னஸ்’ இப்தார் விருந்து

Filed in செய்திகள் by on July 23, 2013 0 Comments
ரம்ஜான் நோன்பு: ஷார்ஜாவில் 2,000 பேர் பங்கேற்ற ‘கின்னஸ்’ இப்தார் விருந்து

சார்ஜாவில், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இணைந்து ரம்ஜான் நோன்பின், இப்தார் விருந்து சாப்பிட்டார்கள். கின்னஸ் முயற்சிக்காக மேற்கொள்ளப்பட்டது இந்த விருந்து என்பது குறிப்பிடத்தகுந்தது. கூட்டு விருந்து ஏற்பாடு… ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த இப்தார் விருந்து, ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை போன்றவை சேர்ந்து உள்ளூர் போலீஸ் துணையுடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 600 மீட்டர் மேஜை… விருந்தில், சுமார் 600 மீட்டர் நீள மேஜையின் மீது, பிரியாணி, […]

Continue Reading »

நெய்வேலியில் என்ன நடக்கிறது?

Filed in செய்திகள் by on July 23, 2013 0 Comments

நெய்வேலியில் இருந்து ஆ.பழனியப்பன், புதிய தலைமுறைக்காக நீண்ட காலமாக மின்வெட்டில் சுருண்டு கிடந்த தமிழகம் கடந்த சில வாரங்களாக மெல்ல மெல்ல நொண்டியடித்து எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால் மீண்டும் இருண்ட காலம் வந்து கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் தலை தூக்கியுள்ளது. காரணம், நெய்வேலி. நெய்வேலியில் உள்ள இரண்டு அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் நாளென்றுக்கு 2,490 மெகாவாட். அதில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பங்கு நாளொன்றுக்கு 1,175 மெகா வாட். இதற்குத்தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள […]

Continue Reading »

969 பவுத்த பயங்கரவாதத்தின் முகம்

Filed in செய்திகள் by on July 23, 2013 0 Comments

மியான்மர் பவுத்த சன்னியாசிகள் தேர்ந்தெடுத்திருக்கும் எண் 969. பவுத்தத்தின் அடிப்படையான மூன்று ரத்தினங்களை (Three Jewels : புத்தர், தர்மம், சங்கம்) இந்த எண் குறிக்கிறது என்கிறார்கள். இந்த எண்ணை பெயராகக் கொண்டு மியான்மரில் தொடங்கப்பட்ட 969 இயக்கத்துக்கு உள்நாட்டில் மெஜாரிட்டியான பவுத்தர்களிடையே பலத்த ஆதரவு. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இந்த இயக்கத்தை புதிய நாஜிக் குழு என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்புவதில் முதன்மையாக இன்றிருக்கும் இயக்கம் 969. பவுத்த தத்துவங்களைப் பரப்பும் […]

Continue Reading »

அமெரிக்காவின் புது எதிரி?

Filed in செய்திகள் by on July 23, 2013 0 Comments

சம்பவம் ஒன்று : கடந்த வருடம் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை போட்டுத்தள்ள… அமெரிக்கா கையை முறுக்கிக்கொண்டு தயார் ஆனது. ஸ்வீடன் நாட்டில் அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு பதியப்பட்டு கைதுக்கு தயார் ஆனபோது திடீரென்று, லண்டனில் இருந்த ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்துக்குள் போய் தஞ்சமடைந்து விட்டார். இன்றுவரை ஈக்குவேடார்தான் அவரைப் பாதுகாக்கிறது. எப்போது வெளியே வருவார் என்று ஸ்வீடனும், ஸ்வீடனை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் கொலைவெறியோடு காத்திருக்கிறார்கள். சம்பவம் இரண்டு : போன மாதம் உலக […]

Continue Reading »

இலவச “பஸ் பாஸ்”

Filed in செய்திகள் by on June 13, 2013 0 Comments
இலவச “பஸ் பாஸ்”

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச “பஸ் பாஸ்” வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.மாணவ, மாணவியரின் நலன் கருதி இலவச பஸ் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

Continue Reading »