அனைவருக்கும் உளம் கனிந்த ஈகைத்திருநாள்(பெருநாள்) நல்வாழ்த்துக்கள் 2015

எங்கள் இறைவா!
எங்கள் நோன்பையும் தொழுகையையும் ஏற்றுக்கொள்வாயாக!

எங்கள் இறைவா!
நாங்கள் உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறோம்.சொல்லாலும் செயலாலும் அந்த சொர்க்கத்தை நெருங்கும் பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக!

எங்கள் இறைவா!
நரகிலிருந்து பாதுகாப்பு கேட்கிறோம்.

எங்கள் இறைவா!
நாங்கள் நற்காரியங்கள் புரிவதற்கு உதவி செய்வாயாக!

கீழ்த்தரமான செயல்களை விடுவதற்கும் எங்களுக்கு அருள் புரிவாயாக!

எங்கள் இறைவா!
இறை நம்பிக்கையை எங்களுக்கு பிரியம் உள்ளதாக ஆக்கி வைப்பாயாக!
மேலும் எங்கள் உள்ளங்களில் அதனை அலங்காரமாக வைப்பாயாக!

எங்கள் இறைவா!
இறைவனுக்கு நன்றி மறப்பதையும் பாவங்கள் செய்வதையும் தவறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பிற்குரியதாக ஆக்கி வைப்பாயாக!

எங்கள் இறைவா!
நாங்கள் உன்னிடம் நேர்வழியையும் இறையச்சத்தையும் கற்பையும் போதுமென்ற மனதையும் கேட்கிறோம்.

எங்கள் இறைவா!
எங்களுக்கு உண்மையை உண்மையாகவே காட்டுவாயாக!
அதனை பின்பற்றும் பாக்கியத்தையும் தருவாயாக!

தீமையை தீமையாகவே காட்டுவாயாக!
அதனை விட்டு நாங்கள் தவிர்ந்து விடுவதற்கும் நீ உதவி புரிவாயாக!

எங்கள் மனைவி மக்களுக்கு நீ பரக்கத் செய்வாயாக!

எங்கள் இறைவா!
நிச்சயமாக எங்களுக்கு பலன் தரக்கூடிய கல்வியை கேட்கிறோம்.
மேலும் அஞ்சி நடக்கும் உள்ளத்தையும் எப்போதும் திக்ரு செய்யும் நாவையும் விசாலமான உயர்தரமான ரிஸ்க்கையும் ஏற்றுக்கொள்ளப்படும் நல் அமல்களையும் உடலில் ஆரோக்கியத்தையும் ஆயுட்காலத்திலும் குழந்தை செல்வத்திலும் பரக்கத்தையும் உன்னிடம் மன்றாடி கேட்கிறோம்.

எங்கள் இறைவா!
எங்களுக்கு பலன் தரக்கூடியவற்றை கற்றுத்தருவாயாக!

நீ கற்று தந்ததை எங்களுக்கு பலனுள்ளதாக்கி வைப்பாயாக!

எங்களுக்கு அறிவு ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!

எங்கள் அனைத்து காரியங்களின் இறுதி முடிவை அழகாக்கி வைப்பாயாக!

எங்கள் எண்ணங்களை சீர்படுத்துவாயாக!

எங்கள் அனைத்து பாவங்களை மன்னித்து விடுவாயாக!

எங்கள் அனைத்து கவலைகளை போக்கி விடுவாயாக!

கடன்களை நிவர்த்தி செய்து விடுவாயாக!

நோயாளிகளை குணப்படுத்திவிடுவாயாக!

தேவைகளை மேன்மையாக்கி நிறைவேற்றிவிடுவாயாக!

அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பக்குவப்படுத்தும் நாயனே! எங்கள் இறைவனே!

எங்களுக்கு நீ இம்மையிலும் மறுமையிலும் நன்மை அளிப்பாயாக நரகிலிருந்து பாதுகாப்பு அளிப்பாயாக!

(Visited 42 times, 1 visits today)

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Nizam says:

    ஆமீன்! ஆமீன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)