அடியற்கை மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

 அடியக்கமங்கலம் தெற்கு தெரு ஹாஜா அலாவுதீன் – ராபியா பானு இவர்களின் மகள் முர்சிதா நஸ்ருன், திருவாரூர் GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். இவர் 1200 க்கு 1177  மதிப்பெண்கள் எடுத்து (98.08% சதவிதம்) திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

aym student

மதிப்பெண் விபரம்
 • தமிழ் 192
 • ஆங்கிலம் 188
 • பொருளியல் 200
 • வணிகவியல் 200
 • கணக்குப்பதிவியல் 200
 • வணிக கணிதம் 197

மாஷா அல்லாஹ்

திருவாரூர் மாவட்டத்தில்  பிளஸ் 2 தேர்வு முடிவு:

தேர்ச்சி சதவீதம் 83.7 %

மாவட்டத்தில் 65 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 14 அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 3 சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள், 19 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 101 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் 2013-2014 ம் கல்வியாண்டில் மொத்தம் உள்ள 14,080 மாணவர்களில் 14,004 மாணவர்கள் தேர்வெழுதினர்.

தேர்வெழுதிய 14,004 பேரில் 4,483 மாணவர்கள், 7,239 மாணவிகள் என 11,722 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களில் 77.91, மாணவிகளில் 87.74 தேர்ச்சி சதவீ தம் என மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 83.7 ஆகும்.

பெண்களின் தேர்ச்சி சதவீதம் அதிகம்:
 
நிகழாண்டுக்கான பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாணவர்களைவிட 10 சதவீதம் தேர்ச்சி மாணவிகளே அதிகம் பெற்றுள்ளனர். மாண வர்களைப் பொருத்த வகையில் கடந்த ஆண்டு பெற்ற தேர்ச்சி சதவீதத்திலிருந்து சற்று குறைந்துள்ளது. பெண்களில் 2 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது பிளஸ்-2 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 82.53 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. நிகழாண்டின் தேர்ச்சி சதவீதம் 83.7 ஆக உள்ளதால் மொத்தம் 1 சதவீதம் மட்டுமே ஒராண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

இருபள்ளிகள் மட்டும் 100 சதவீதம் தேர்ச்சி:

 
 
மாவட்டத்திலுள்ள 65 அரசு மேல்நிலைப்ப ள்ளிகளில் திருமக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல் நிலைப்பள்ளி ஆகிய இருபள்ளிகள் மட்டும் 100 சதவீத தேர்ச்சிப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
(Visited 35 times, 1 visits today)

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

 1. MOHAMED THAJUDEEN says:

  மாஷா அல்லாஹ்..
  மாவட்டத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்கும்,ஊருக்கும் மற்றும் அவரது பெற்றோருக்கும் பெருமை சேர்த்த சகோதரி முர்சிதா நஸ்ருன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ….

 2. HajaNijamudeen says:

  மாஷா அல்லாஹ்..
  மாவட்டத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்கும்,ஊருக்கும் மற்றும் அவரது பெற்றோருக்கும் பெருமை சேர்த்த சகோதரி முர்சிதா நஸ்ருன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இறைவன் மேன்மேலும் நல்லருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)