அமான் சேவைகள் இன்று வரை


அமான் & பைத்துல்மால் நிர்வாகிகள் கூறும் அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்…
அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் 2008 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் அமீரகம் துபாயில் ஒருங்கிணைந்து , கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ள நம் சமுதாயத்தின் நிலைமைகளை ஆலோசனை செய்து,

தாங்களும் மற்றும் நமதூர் சகோதரர்களும் அல்லாஹுவின் அருளால் வாரி வழங்கும் சந்தா, நன்கொடை, மற்றும் ஜக்காத், சதகா, நிதிகளை பெற்று, நமதூர் ஏழை எளிய மாணவ,மாணவியர்க்கு கல்வி உதவியும், நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும், முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வாழ்வாதார உதவியும், தொழில் முனைவோருக்கு சிறுதொழில் செய்ய முதலீட்டு உதவிகளையும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்து வருகிறோம்.

அமான் சேவைகள்

உதவிகள்இந்தியன் ரூபாய்
அமான் சேவைகள் தொடக்கம் முதல் இன்று வரை - 12/Apr/2016
கல்வி உதவி14,58,950/-
மருத்துவ உதவி5,66,000/-
வாழ்வாதார உதவி5,68,575/-
மாதாந்திர உதவி3,82,000/-
வட்டியில்லா கடன்2,60,000/-
ஆக மொத்தம்29,75,725/-

(இருபது லட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து ஐநூற்று இருபத்து ஐந்து ரூபாய்)

 அமான் மூலம் வழங்கப்பட்டுள்ளது .அல்ஹம்துலில்லாஹ்.

 இதனை செய்வதற்கு உறுதுணையாக இருந்த தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்களுக்கும் நமதூர் சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்களுக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும்  கருணை மிக்க அல்லாஹ் ஈமானோடு நீடித்த ஆயுளையும் நோயற்ற வாழ்வையும் நிறைந்த செல்வத்தையும் வாழ்வில் பரகத்தையும் ரஹ்மத்தையும் தந்தருள்வானாக என்று நிறைந்த இதயத்தோடு துஆ செய்கிறோம் ஆமீன்.

நம் உதவியை நாடி அதிகமான மக்கள் மனுக்களை அளித்தவண்ணம் உள்ளனர். அவர்களின் நியாயமான தேவைகளை நிவர்த்தி செய்வது அல்லாஹ்வின் பொருட்டு நம் அனைவர் மீதும் கடமையாகும். அவர்களின் நியாயமான தேவைகளை நிவர்த்தி செய்ய அதிகமான நிதி தேவையென்பதும் தாங்கள் அனைவரும் அறிந்ததே.

அதிகமான பொருளாதார உதவிகளை மென்மேலும் வாரி வழங்குவதோடு, தங்களின் மேலான ஆதரவையும் ஆலோசனைகளையும்   மறுமை வெற்றிக்கு வழி வகுக்கும் நன்மைகள் கிடைக்க அல்லாஹுக்காக நீங்களும் இதில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

 

இப்படிக்கு

அமான் நிர்வாகம்
பைத்துல்மால் குழுமம்
கல்வி வழிக்காட்டல் குழுமம்
மருத்துவ வழிகாட்டல் குழுமம்
ஆலோசனை வழிக்காட்டல் குழுமம்
அமான் உறுப்பினர்கள்

(Visited 82 times, 1 visits today)