நோக்கமும் திட்டமும்


அமானின் நோக்கம்

அடியக்கமங்கலத்தில் வாழும் இஸ்லாமிய   சமுதாயத்தில் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழை   மாணவர்களுக்கு கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி   அவர்களை கல்வி கற்க தூண்டுவதும்  அதற்கு உதவுவதும், நலிவடைந்தவர்களுக்கு   மருத்துவ சிகிச்சைக்கு  முடிந்தளவு பொருளாதார உதவிகள் செய்வதும்தான் அமானின் முக்கிய நோக்கம்.

அமானின் திட்டங்கள்

1. முடங்கிக் கிடக்கும் மத்ரஸா சிராஜுல் முனீர் செயல்பட செய்வது
2. பழைய பள்ளிவாசல் செப்பனிட நடவடிக்கை எடுப்பது
3. அடியற்கை அரசு உயர்நிலைப் பள்ளியின் கல்வித் தரம் உயரவும்; அதனால் வெளி ஊர்களில் சென்று படித்து வரும் நமதூர் பிள்ளைகள் நமதூர் பள்ளியிலேயே படிக்க ஊக்குவிக்கவும்; ஆங்கில வழிக் கல்விக்கு வகை செய்யவும்; மாணாக்கர்களின் எண்ணிக்கை கூடும் சமயத்தில் பெண்கள் உயர் நிலைப்பள்ளி உருவாக உழைத்திடவும் நடவடிக்கை எடுப்பது

4. நன்கு படிக்கும் மாணாக்கர்களை 8 ம் வகுப்பு முதல் கண்டுணர்ந்து அவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கவும்; திறன்மிக்க மாணாக்கர்களை உருவாக்கும் ஆசிரியர்களை கெளரவிக்கவும் ஏற்பாடு செய்வது

5.மருத்துவ கருத்தரங்கங்கள் பல நடத்தி நம் மக்களிடையே நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது

(Visited 161 times, 1 visits today)