அமான் 9-வது ஒருங்கிணைந்த பொது குழு கூட்டம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

அல்ஹம்துலில்லாஹ் !

09/04/2016 – துபாய்.

நேற்று 8 ஏப்ரல் 2016, வெள்ளிக்கிழமை – பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, தேரா துபாய் சப்கா பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள ராஃபி ஹோட்டலில், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் 9-வது ஒருங்கிணைந்த பொதுக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
ஜனாப். குத்துபுதீன் அவர்கள் கிராஅத்துடன் தொடங்கிய விழா, ஜனாப். நூருல் அமீன் முன்னிலையில்,  ஜனாப். பனி அப்தால் தலைமையில் துவங்கியது.

கூட்டத்தில் ஜனாப். சுல்தான், துணை – தலைவர், அமான், வரவேற்புரை வழங்க; ஜனாப். ஹாஜா ஷவ்கத் அலி, ஒருங்கிணைப்பாளர், ஜனாப். ஹாஜா முபாரக், முன்னாள் தலைவர்; ஜனாப். சிராஜ் ஹஜ்ரத், முன்னாள் தலைவர்; ஜனாப். அமீருதீன், M.T, M. நூருல் அமீன், ரஹ்மத் அறக்கட்டளை (CMN சலீம் அவர்களால் நடத்தபடுவது); S K அபுல் ஹசன் முன்னாள் தலைவர், அமான் கத்தார்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் ஜனாப். ஹுசைன் பாஷா அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ஜனாப். முஹமது தன்வீர், செயலாளர், அமான் – ஆண்டு வரவு செலவு கணக்கு படிக்க ; ஜனாப். சமீஹுன் மஜீத், தலைவர், அமான் செயற்பாடுகள் – நிர்வாக விளக்கம் தர,  ஜனாப். முஹமது ஜஃபின், பொருளாளர், அமான் நன்றியுரை கூற, பரிசு குலுக்கலுடன் விழா இனிதே நிறைவேறியது.

கூட்டத்தின் நடுவில், அமானுக்கு வந்த ஜமாஅத் தலைவர், அமான் பஹ்ரைன், அமான் டியூஷன், தாயக பிரதிநிதிகளின் வாழ்த்து சேதிகள் காணொளியாகவும் மற்றும் ஒலியாகவும் காட்டப்பட்டது.

நிகழ்ச்சிகளை ஜனாப். அமீர் J. தொகுத்து வழங்கினார், அது சமயம் அடியக்கமங்கலம் நண்பர்கள், அமான் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் அமான் நன்றியை தெரிவித்துகொள்கிறது. ஜசாக்கல்லாஹ்!

-நிர்வாகம், அமான்

 

(Visited 18 times, 1 visits today)