Archive for February, 2016

அபுதாபி மண்டல செயற் குழு கூட்டம் – 26-02-2016

அபுதாபி மண்டல  செயற் குழு கூட்டம் – 26-02-2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَانِ الرَّحِيمِ அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…). நேற்று 26/02/2016 அன்று அபுதாபி மண்டல செயற் குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் ஜனாப். ஹாஜா முபாரக் கிராத் ஓத,  துணை பொது செயலாளர் ஜெஹபர் சாதிக் வரவேற்புரை நல்க இனிதே துவங்கியது. கூட்டத்தில் அபுதாபி மண்டல ஜனாப். ஹாஜா முபாரக்,  ஜனாப். சிராஜ் ஹஜ்ரத்,  ஜனாப். ஷேக் தாவூத், ஜனாப். அல் அமீன் உரை நடத்தினர்  மற்றும் சில கோரிக்கையும், குறைகளையும் […]

Continue Reading »

ப்ரீடம் ரூ.251 ஸ்மார்ட்போனின் முன் பதிவு நிறுத்தம் வாடிக்கையாளர்கள் தவிப்பு!

Filed in பல்சுவைப் பகுதி by on February 20, 2016 0 Comments
ப்ரீடம் ரூ.251 ஸ்மார்ட்போனின் முன் பதிவு நிறுத்தம் வாடிக்கையாளர்கள் தவிப்பு!

புதுடெல்லி, உலகின் மிகக்குறைந்த விலையில் ப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ‘ரிங்கிங் பெல்ஸ்’, உலகிலேயே மிகக் குறைந்த விலையாக ரூ.251–க்கு ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது. இந்த குறைந்த விலை ஸ்மார்ட் போனுக்கான முன்பதிவு  பி்ப்ரவரி 17-ம் தேதி காலை 6 மணிக்கு  தொடங்கி வரும்  22-ம் தேதி இரவு 8 மணி வரை நடைபெறும் […]

Continue Reading »

பட்டாவில் கவனம் வேண்டும்!

Filed in பயனுள்ள தகவல்கள் by on February 20, 2016 0 Comments
பட்டாவில் கவனம் வேண்டும்!

சொத்து வாங்கும்போது கிரயப் பத்திரத்தில் அடங்கியிருக்கும் சாரம்சங்களை ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதுடன் பரிவர்த்தனை முடிவடைந்து விடுவதில்லை. ஒரிஜினல் கிரயப் பத்திரத்தை சரிபார்ப்பதுடன் பட்டாவையும் கேட்டு பெற வேண்டும். சொத்து விற்பனை சொத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கிய அங்கமான பட்டா மீதும் கவனம் பதிப்பதும் அவசியம். சிலர் கிரயப்பத்திரம் பதிவு செய்வதற்கு காட்டும் அக்கறையை பட்டா வாங்குவதற்கு காட்டுவதில்லை. பட்டா வாங்காமலேயே கிரயப்பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சொத்தை விற்பனை செய்வதற்கு முயற்சிக்கலாம். பட்டாவை பின்னர் வாங்கி கொள்ளலாம் என்றும் […]

Continue Reading »

தெர்மா பிளீஸ் – இடவசதிகளை ஏற்படுத்தும் உள் அறை சுவர் கட்டமைப்பு!

Filed in பயனுள்ள தகவல்கள் by on February 11, 2016 0 Comments
தெர்மா பிளீஸ் – இடவசதிகளை ஏற்படுத்தும் உள் அறை சுவர் கட்டமைப்பு!

நமதூர் அடியக்கமங்கலம் அதன் சுற்று வட்டார முஸ்லிம்கள் வசிக்கும் ஊர்களில்,  பழங்காலத்தில் கட்டமைக்கப்பட்ட வீடுகளின் அறைகள் அல்லது இன்றைய காலத்தில் கட்டும்  வீடுகளின் அறைகள் ஒவ்வொன்றும் விசாலமான இட வசதியை கொண்டிருக்கும். சதுர அடிகள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் அறைகளின் பரப்பளவுகள் சுருங்கி கொண்டே வருகின்றன. ஆயினும் ஒருசில அறைகள் விசாலமாக அமைந்திருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன. பழமையில் புதுமை அதற்கேற்பவே கட்டுமான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். பழைய வீடுகளையும் […]

Continue Reading »

பூமியை விண்கல் தாக்கினால் மீண்டும் பனியுகம் ஏற்படும்!

Filed in பல்சுவைப் பகுதி by on February 11, 2016 0 Comments
பூமியை விண்கல் தாக்கினால் மீண்டும் பனியுகம் ஏற்படும்!

வாஷிங்டன். அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் சமீபத்தில், விண்கல் ஒன்று பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய அது மார்ச் மாதத்தின் போது நிலாவை விட 21 மடங்கு அருகில் பூமியை கடக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தேசிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தின் சார்லஸ் பார்தீன், பேசும் போது இந்த விண்கல் பூமியில் விழுந்தால் 15 கிலோ […]

Continue Reading »

சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் உயிரிழந்தார்!

Filed in செய்திகள் by on February 11, 2016 0 Comments
சியாச்சின் பனிச்சரிவில் மீட்கப்பட்ட ராணுவ வீரர் உயிரிழந்தார்!

புதுடெல்லி, சியாச்சின் பனிப்பாறை சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தில், கடல் மட்டத்தில் இருந்து 20,500 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலையில் அன்னிய சக்திகள், தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் நமது ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு உள்ளனர். உடலை உறையச் செய்யும் கடும் குளிரில் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 10 வீரர்கள் கடந்த 3–ந்தேதி ஏற்பட்ட திடீர் பனிப்பாறை […]

Continue Reading »

திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூரில் 14-ந் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்கள்!

திருவாரூர் திருவாரூரில் வருகிற14/02/2016-ந் தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமுக்கான விண்ணப்பங்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார். வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். அப்போது வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளிடம் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த சொரக்குடி தொழில்நுட்ப கல்லூரியில் வருகிற 14/02/2016-ந் தேதி காலை 8 […]

Continue Reading »

மருத்துவ துறையில் 1202 பணிகள்

மருத்துவ துறையில் 1202 பணிகள்

தமிழ்நாடு மருத்துவ சேவை தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) அமைப்பு மருத்துவம் சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பார்மசிஸ்ட், டார்க் ரூம் அசிஸ்டன்ட், லேப் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 1091 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பார்மசிஸ்ட் பணிக்கு 333 இடங்களும், டார்க் ரூம் அசிஸ்டன்ட் பணிக்கு 234 இடங்களும், லேப் டெக்னீசியன் பணிக்கு 524 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும், பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க […]

Continue Reading »